Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அம்மா - ஞானவதி 01 MAR 2020 Canada

நிறைந்த அன்போடு சிரித்துக்கொண்டே எம்மை கொஞ்சி தழுவிய எம் செல்வமே உடலும் மனமும் உறுதி கொண்டாய் வெள்ளை மனம் கொண்ட மிகத் தூய்மையான பேரழகு தெவிட்டாத தெள்ளமுதே கொஞ்சமும் கஞ்சத்தனம் பார்க்காத தலைசிறந்த எம் தலைமகனே இனிமையும் பெரும் கருணையும் நல்லறிவும் பதுமை புன்னகை பூத்த எங்கள் இதயக் கனி அமுதமே மனமார உங்களை விரும்பி தஞ்சம் என எண்ணி கூடவே இருந்தோமே அதில் பஞ்சம் என்று ஏதும் கண்டறிவோம் இறைவா நல்வழி உதவிபுரிந்து நோயை தடுத்து நீண்ட ஆயுளோடு வைத்திருக்கலாம் வஞ்சம் செய்து போட்டாயே தெய்வமே வாழ வேண்டிய செல்வத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கதையை முடித்து விட்டாயே நஞ்சை உண்டு அகிலத்தை காப்பாற்றிய தெய்வமே என் பிள்ளைக்கு ஏன் இந்த நஞ்சு விஷமம் அல்லவா அந்த பிஞ்சு உடலும் உள்ளமும் எப்படி இருந்திருக்கும் அவர் வல்லமையும் வலிமையும் தன் வலியை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை நாம் பெற்ற செல்வமே என் நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் அந்த நினைவினில் உன் முகம் நிறைந்திருக்கும் உங்களோடு நாம் சேர்ந்து பல சமயம் கூடமாட பல இடங்களில் சந்தோசமாக திரிந்தோம் எங்கள் மனம் நிறைவாக பேருவகை வரும் இன்று நீங்கள் இல்லாமல் நாம் நடைபிணமாக திரிகிறோம் எங்கள் மனம் பனி நீராய் உருகிக் கரைகிறது தரத்தில் நிறைவான எங்கள் தங்கமே தங்கச் சுரங்கமே அளவில்லாத நின்ற பெருங்கருணைப் பேராறே தன்னலம் கருதா பெருந்தகையை உங்கள் மூச்சுக் காற்றும் வந்து தாய் மொழி பேசுமே பெரியவனே உன் ஆசையை ஆதங்கத்தை எண்ணத்தை அவலத்தை தேவையைக் கூட தெரியப்படுத்தவில்லை என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களோடு எம் கண்ணின் மணி போல எம் ஆருயிராய் நின்றானே ஆறாத இன்பம் அருளும் மலை போல அழகாக இருந்த பொன் வண்ணமே யார் பறித்தார் இன்னுயிரை என் கண்களும் ஆறவில்லை இன்று உங்கள் ஆத்மா சாந்தியடைய சொர்க்கம் செல்ல உன்னைப் பெற்ற நாம் தெய்வத்தை வேண்டி நிற்கிறோம் என் இதயம் தாங்குமா தகுமோ இது முறையோ இது தருமம் தானோ அனலிடைப்பட்ட மெழுகாய் உருகுரோம் ஐயா.ஆற்றோம் ஐயா உருகிப் புலம்புகிறோம் இறைவா என் பிள்ளையின் ஆத்மா சுகம் காணவேண்டும் ஓம் சாந்தி.

Tributes