Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 19 SEP 2020 Canada

பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம் உள்ளம் புளங்காகிதம் கண்டு மனம் இறும்பூது எய்தும் பல சம்பவங்களில் திறமைகளை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையும் இன்று காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுதே ஐயா கவலை என்னும் கண்ணீர் என் நெஞ்சம் பிளந்த போது என்னை எடுத்து கணக்கை சரி செய்ய உங்களை வாழ வைத்து இருக்கலாம் அதன் பிறகும் என் நெஞ்சை கசக்கி பிழிந்து நடைபோட வேதனையில் சிறு முனகல் தென்பட்டாலும் உடுக்கை இழந்தவன் கைபோல உதவிக்கு முனைப்போடு முன்வந்த தூய்மையான உள்ளம் கொண்ட உங்களை இழந்து வாழ்வது மூளையை விட்ட மாதிரி பதைபதைப்போடு பயணம் தொடர்கிறது படைத்தவனின் படைப்பு முழுமை பெற்ற ஓவியமோ உன் உழைப்பால் வராத எதனையும் உள்ளத்தினாலும் தொடமாட்டார் நந்தா விளக்கு அணையா நாயகனே களங்கமற்ற அன்பு உள்ளமே கலங்கி விட்டோமே நாம் ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை நவரத்தினம் பதித்த தங்க தேர்போலp பொன்னூஞ்சல் அதில் உயர் மன்னவன் போல் நீங்கள் பவனிவர இளஞ்சூரியன் போல் உன் பொன் மேனி பொன் ஒளி சிந்தும் இளமையோடு வள்ளலே உங்கள் சொரூபம் தோன்றுதே ஏங்குது மனம் இனி எப்பிறப்பில் காண்போம் கலங்குது நெஞ்சம் உன் உள்ளம் இருப்பது எம்னிடமே அதை உயிருள்ளவரை பூசிப்போம் இறைவா சொர்க்கம் இருப்பது உண்மையென்றால் என்ர ராசா சொர்க்கத்தில் இருந்திட வேண்டும் ஓம் சாந்தி

Tributes