
-
11 JAN 1981 - 30 OCT 2019 (38 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Vaughan, Canada
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தபின்பும்
உங்களின் விம்பம் எங்களின்
விழியை விட்டு
அகலவில்லை.
உங்கள் வாசனை எங்களின்
சுவாசத்தில் இருந்து நீங்கவில்லை.
உங்கள்
இனிமையான குரல்
எங்களின் செவியில் இன்னும் ஒலிக்கிறது.
உங்களைப் பாசத்துடன்
தழுவ
இன்னும் மனம் துடிக்கிறது.
என்று உங்களை இனி காண்போம்
என்று மனம்
ஏங்குகிறது.
உங்களின் அன்பான பார்வையும்,
அழகான புன்சிரிப்பும்,
பணிவான செயலும்,
நீங்கள்
போனபின்பும்
எங்களைக் கட்டிப் போட்டுள்ளது.
உங்கள் பிரிவை இன்னும் மனம்
ஏற்றுக் கொள்ளவில்லை.
நம்ப மறுக்கிறது.
எங்கள் உள்ளக் குமுறல்கள்
இதயத்தை
வதைக்கிறது.
கொடியதிலும் கொடியது
பிள்ளையின் இழப்பு.
இதில் மீண்டுவர வழியும்
உண்டோ?
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Vaughan, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...