திதி: 27-10-2022
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம் வியந்த
எம் திருமகனே ஏனோ?
நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள்
கலங்கி
நெஞ்சம் உருகித்
தவிக்கும்
எங்களின் நிலையை
யார் தான் அறிவார் மகனே?
சத்தம் இல்லாமல் நித்தம்
துடிக்க வைத்து விட்டு
மொத்தமாய் எம்மை மோசம்
செய்ததேனோ?
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கவர்ந்து சென்ற
காலனவனின்
கருணையற்ற
செயலால் கலங்குதையா எம்
நெஞ்சம்
மகனே என்று
உனை அழைக்க
அவனியில்
நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்
எம் பெரியமகனே!!!
ஈரவிழிகளுடன் நீங்காத
நினைவுடன் வாழும் குடும்பத்தினர்.
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...