திதி: 11-11-2026
புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி
விட்டு மீளாத் துயில் கொண்டீர்களே !!
விண்ணோரும் தினம் வியந்த
எம் திருமகனே ஏனோ?
நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உள்ளம் உடைந்து கண்கள்
கலங்கி நெஞ்சம் உருகித்
தவிக்கும் எங்களின் நிலையை
யார் தான் அறிவார் மகனே?
நீண்ட காலம் எம்மோடு வாழ்ந்திருவாய்
என எண்ணி பல எண்ணங்கள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே!
உங்களை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்
தரணீ எங்களிடமே வந்துவிடு...
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...