Tribute
பிராத்திக்கின்றோம்
எங்கள் செல்வமே நீங்கள் உறவைச் சொல்லி அழைக்கையிலே தேன் வந்து பாயுது காதினிலே. எம் கண்களிரண்டும் உன்கழல் கண்டு களிப்பதும் ஆனதுவே. ஒரு காரிகையார் தம் வாழ்வொடு உங்கள் வாழ்வு கடைப்படவில்லையே. யாரைப் பற்றி ஏதாவது கதைப்பது என்றால் மூன்று படிகள் வைப்பாய். நல்லா தீர யோசித்து உறுதியாக இருக்கா? அதில் தெளிவு இல்லை என்றால் யாருக்கும் தரக்குறைவான பாதிப்பு ஏற்படாமல் நன்மை உண்டா? அதுவும் சங்கடம் என்றால் நல்ல பிரயோசனம் உண்டா? என்ற தெளிவான சிந்தனையில் யாரையும் எக்காரணம் கொண்டும் நிந்திக்கவில்லை. குற்றவாளி தப்பித்தால் பரவாயில்லை, அது பாவமன்னிப்பாகும், தவறியும் நிரபராதி மறந்தும் தண்டிக்கப்படக் கூடாது, அது பழியோடு கூடிய பாவம். விடாது துரத்தும் என்பாய். என்ன தாராளகுணம். உயிரை மீண்டும் பெறலாமா! சொந்தத் தாய் தந்தை சகோதரர்கள் துன்பத்தில் உழலும் போது சிந்தையும் சொல்லும் சேயலும் ஒன்றியே துடிப்போடு வந்து உதவுவாய். இரக்கமுள்ள உள்ளமே உங்களை மின்னாமல் முழங்காமல் பெய்கின்ற மழை போல் நோய் கொன்றபோது கும்பிட்ட தெய்வம் தன் கருணையை வெளிப்படுத்தவில்லை. தெய்வமே எம் பெரிய மகனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். சொர்க்கம் செல்ல வேண்டும். ஓம் சாந்தி!
Write Tribute
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...