Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 27 JUN 2020 Canada

பகுதி - 1 யோக்கியமான செல்வமே ஆரோக்கியத்தில் கை வைத்து சகல சௌபாக்கியமும் காணாமல் போய் விட்டாய் ஆற்றுப்படுத்த பலரும் ஆலோசனைகள் உதாரணங்கள் பல வார்த்தைகள் ஏராளம் ஆனாலும் ஆறுதில்லை நாளடைவில் கடவுளைக் கும்பிடு என்று கூறும் போது என்ன நடக்கப்போகும் என்று இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா என்ற தோரணையில் இரண்டு கைகளையும் விரித்தபடி கனிவுடன் மௌனமாக பார்த்தாயே மாறும் என எதிர்பார்த்தோம் ஆதாரம் இல்லை ஐயா ஆறுதல் உள்ள உங்களால் ஒரு தாவாரம் இல்லை நீங்கள் இல்லாத எமக்குப் பெரும் சிரமங்கள் காதோரம் உங்கள் ஓசை வந்து இனிக்கின்றது நாம் தேவாரம் பாடுகின்றோம் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நீங்கள் நடந்து கொண்ட முறை எல்லாம் கையோடு தான் உங்களுடன் வாழ்ந்த காலங்கள் கண்ணோடு தான் இன்று மனமுடைந்து நாம் வாழும் காலங்கள் எல்லாம் உங்கள் நினைவோடு தான் நீ தர்மம் வழுவாமல் கருணை என்னும் கண் கொண்டு வழிநடத்திய செல்வமே

Tributes