Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 12 APR 2020 Canada

பகுதி -1 எம் இதய வானின் விடிவெள்ளியே காலை எழுந்த செந்தூர வண்ண இளம்பரிதியே மூன்றாம் பிறையே மாலை கடந்த முழுநிலவே முத்தமிழே உங்களை காண ஆசையோடு விரும்பி கண்கள் தேடுதே நெஞ்சம் தவிக்குதே பெற்றோர் மறைந்தாலும் என் கூட பிறந்த அண்ணனா அறிவில் உயர் பண்புகள் பேரொளி என்றும் எங்கள் பக்க பலம் என்று எண்ணிய உங்கள் தங்கையின் ஏக்கம் தணியவில்லை உன் பெற்றோர் தம்பி தங்கை உற்றார் படும் வேதனைக்கும் கவலைக்கும் அழுகைக்கும் அளவில்லை ஏன் இந்த விதி இதயம் என்றொரு ஏடு எடுத்தோம் அதில் எத்தனையோ கதைகள் எழுதி வைத்தோம் இன்று அத்தனையும் பாவி நெஞ்சில் வந்து எம்மை பாடாய்படுத்துதையா உங்களை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்ற முழு நம்பிக்கையோடு ஆர்வத்தோடும் ஊக்கத்தோடு உன் தங்கை கலந்து வலியுறுத்திய ஆலோசித்த வைத்தியர்கள் ஏராளம் வேண்டாத தெய்வமில்லை அவதானித்து கவனித்து நடந்து கொண்ட அக்கறை சொல்லில் அடங்காது முயற்சி பயன் தரவில்லை எது வந்த போதும் உடலும் உள்ளமும் சித்த சுத்தமாய் இருந்த உங்களை தெய்வமும் இயற்கையும் ஏனய்யா காப்பாற்றவில்லை என்றும் உங்களுடன் பாசத்துடன் பக்கபலமாகவும் பெரும் துணையாகவும் உங்கள் துணை இருப்பதை எண்ணி பெருமையுடன் ஆசைப்பட்டோம் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் வந்து அலைமோதும் எல்லாம் மறந்து போகுமா எம்மைப் பிரிந்து போனிரே என் கண்முன்னே பறந்து போனிரே நாம் பார்க்கும் போது உங்கள் கண்களினால் கனிவுடன் நம்மை கவர்ந்து போனாயே நான் விரைந்து உன்னிடம் வர என்ர அப்பு என் ராசா எம் மனது ஆசைப்படுகிறது. இனி எமக்கு இருந்தும் விடிவில்லை வழிகள் தெரியவில்லை எம் விழிகளில் ஒளியில்லை நேரம் போகுதில்லை பொழுதும் கழியவில்லை வெளிநின்ற உன் திருமேனி கண்டு களி நின்று கரை கடந்த வெள்ளம் போல் நெஞ்சில் உன் நினைவு இன்னும் பொண்றாது தோன்றுதே உங்களில் எந்த குறையும் இல்லை பழியுமில்லை நீங்கள் வஞ்சகரோடு இணங்கவில்லை உனது எனது என்று கருதுவார் ஓடு பிணங்கவில்லை திக்குத் தெரியாத நின்று எங்களுக்கு கலங்கரை விளக்கு தெளிந்த ஞானச் செல்வமே உன் எழில் வண்ணம் தோன்றுதே கைமாறு கருதாது கடமை புரிந்த செல்வமே எஞ்ஞான்றும் தன் பெருமை பேசாத பெரியவனே உன் கேண்மை பழகியவர்கட்கெல்லாம் இருநிலம் பிளக்க வேர் விழ்க்கும் என்பதும் வாய்மைல்லவா.

Tributes