
Tribute
பகுதி - 1 எந்த நிலையிலும் துன்பம் தராத இடையூறு செய்யாது எந்த சிக்கலான விவகாரமாக இருந்தாலும் பதட்டப்படாமல் தம்பட்டம் அடிக்காமல் அமைதியான துணிவுடன் விவரமாக கையாண்ட திறன் கொண்ட செல்வமே நம்பிக்கை நட்சத்திரமே நம்மை விட்டுப் போய் விட்டாயே முடிந்த பின் எங்கே மனதில் அமைதி கருணை உள்ளமே அன்பின் உருவமே அழகு தெய்வமே ஆசை மகனே செல்வ வளம் பொருந்திய செல்வமே மகிழ்வோடு நல்ல வண்ணம் வாழ வேண்டிய எங்கள் செல்வமே திடீரென மாண்டு போனது என்ன மாயம் ஆண்டவனே ஆறாத காயம் எங்களுக்கு பல ஆண்டுகள் கடந்தாலும் நாம் உயிர் உள்ளவரை ஆறாது நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ஆடுகின்ற நாடகம் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ தேடிய சொத்து சுகம் இழந்தோம் தேட கிடையாத உங்களையும் இழந்தோம் செல்வமே நீங்கள் செய்த உதவிகளையும் உங்களையும் மறக்க முடியுமா உங்கள் நினைவை உயிருள்ளவரை மறக்க முடியுமா எம்மை விட்டுப் போய் விட்டாயே எங்கள் ராசா அருமருந்து என்ன அறிவார்ந்த பிள்ளை நீங்கள் எல்லாம் பார்த்து நல்லா இருக்கிறீர்கள் என்று மேலோட்டமாக இருந்துவிட்டேன் நாம் சிரமப்படக் கூடாது என்பதற்காக எதையும் நீங்கள் கூறவில்லை நீங்கள் விழுந்த பின்பு தான் விளங்கிக் கொண்டோம் பெரும்பாவி நாம் தவற விட்டு விட்டோம் காலம் கடந்து விட்டது உங்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டோம் பெருநீரோசை அமைந்துள்ளது என் நெஞ்சம் குமையிதையா குற்ற உணர்வு மெல்ல கொல்லுதய்யா நாம் பெரும் தண்டனைக்கு ஆளாக வேண்டும் ஐயா பெற்ற தாயின் குமறல் தம்பியும் தங்கையும் தாங்க முடியாத துயர வலியை நெஞ்சுக்கு உள்ளடக்கி நெஞ்சுக்குள் தவியாய் தவிக்கிறார்கள் உறவுகள் நட்புகள் ஆறுதலாக ஆற்றினாலும் மடை திறந்த வெள்ளம் போல் உங்கள் நினைப்பு பாய்ந்த வண்ணம் உள்ளது என்ன செய்ய என்ன சொல்ல கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்வளித்த தெய்வம் என்னை எடுத்து எம் பிள்ளையை வாழ விட்டு இருக்கலாமே கைவிட்டு விட்டாய் உயிரை மீண்டும் பெறலாமா இந்தப் பெரும் இழப்பை தாங்க முடியவில்லை போய் விட்டாயே என்ர ராசா எங்கள் நிலை என்னவோ ஏதோ என்று எண்ணியபடி எட்டுத்திக்கும் எட்டி எட்டி கவனித்த வண்ணம் எங்களைப் பார்த்த செல்வமே
Summary
-
Jaffna, Sri Lanka Birth Place
-
Vaughan, Canada Lived Place
-
Hindu Religion
பகுதி - 2 இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளரவில்லை சொல்இழுக்குப் படவில்லை பேச்சு மாறவில்லை குணம் மாறவில்லை அச்சப்படவில்லை பின்வாங்கவில்லை இது பேராண்மை, அருமை செல்வமே உங்கள் நடவடிக்கைகள் கண்ட எம்...