Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 17 MAY 2020 Canada

பகுதி 1 எங்கள் ராஜகுமாரா ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் நீ தான் முதல் உறவு ஏரிக்கரை ஆற்றங்கரையோரம் எல்லாம் ஆட்கள் உள்ள நேரத்திலும் யாருமற்ற வேளையிலும் காணுகின்ற மணற் பரப்பிலும் உம்மோடு கூட சேர்ந்து நீராடியும் கால் நனைத்தும் தடம் பதித்து நடந்ததும் ஒற்றையடிப் பாதையிலும் வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் இன்று நாம் இணைந்து நினைக்கின்றோம் நினைப்பு தினமும் சுரந்த வண்ணம் உள்ளது அன்னம் தண்ணீர் கொள்ளவில்லை கையும் காலும் ஓடவில்லை கண்ணும் நெஞ்சும் ஓய்வதில்லை உங்கள் இனிய புன்சிரிப்பில் வற்றாமல் ஊற்றெடுக்கும் அளவற்ற அன்பு உள்ளே கொண்டு போகுதய்யா கற்பனைக்கும் எட்டாத தேவாமிர்தம் வாழ்க்கை என்பது போர்க்களம் என்று பூக்கள் சொல்கிறதே சில சமயம் சில பிரச்சினைகள் வரும்போது மௌனமொழியால் எங்களை ஆற்றி தேற்றி சாந்தப்படுத்தி தன்மையும் சாமத்தியம் சத்திய வாய்மையும் உங்களிடம் நாம் அறிந்த பாடம் அல்லவோ

Tributes