Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Father, Manoharan 10 JAN 2020 Canada

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பரந்த பவளம் போல் மேனியும் இனித்த பார்வையும் இதயமும் இனிமை சொல்லின் செல்வன் சொல்லாமல் செய்பவன் ஏவி செய்யான் எதிர்க்கவும் மாட்டான் எதிர்பார்க்கவும் மாட்டான் எங்கள் செல்வமகன் செல்ல மகன் புகழோடு பிறந்த மகன் சீரோடும் சிறப்போடும் நேராக வாழ்ந்த மகன் ஆளுமையில் ஆண்மை சிங்கம் திடீரென்று நோய் வந்து கொன்று போனதே உன்னை காப்பாற்ற முடியாத இந்த ஏழைக்கு மகன் ஆகினாய் உன் பண்பு பரிவு பாசம் விசுவாசம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கம் என அனைத்து இலக்கணத்திற்கும் இலக்கியமாய் வாழ்ந்து வழி காட்டிய தெய்வமகன் இடைநடுவில் நம்மைவிட்டு போய்விட்டாயே தலைசிறந்த தலைமகனே உன் குணங்கள் அனைத்தும் உன் நெஞ்சைத் தொட்டு இதயம் கவலையில் நனைந்து தோய்ந்து கண்கள் கலங்கி கண்ணிர் இறங்கி உன் நினைப்பு நிரம்பி வழிகிறதே மகனே எம்மோடு தங்காமல் போய்விட்டாயே தங்க மகனே எம்மை தாங்கிநின்ற வைரம் மகனே நம்மை மன நிறைவோடும் மதிப்போடும் அன்பாக வழிநடத்திய முத்தான மகனே உன் நினைப்பு ஒழிந்து போகுமா? சிவனே பெரிய கடவுள் என்று தினம் தன் சிந்தையில் நினைத்தவனின் பெரிய மகனை திடீரென இழந்து சீர்குலைந்து சிதைந்து நிற்கிறோமே மகனே சிவன் வழி ஒளி சேர வேண்டி தினமும் சிவசிவ என்கிறேன் என் மகனே நவரத்தினமே பேரொளியே. சிவனே எம்மைப் பாருங்கள் இன்னும் நம்மில் பழி பாவங்கள் இருந்தால் அதை தாங்கிக் கொள்ளுங்கள். எங்கள் ராசா இன்று உன் பிறந்தநாள் என்று நீ சொர்க்கம் செல்ல வேண்டி இதை வரைகிறேன். ஓம் சாந்தி!

Tributes