Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 29 AUG 2020 Canada

பகுதி - 1 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு பொன்னொளி சிந்திடும் பால் வண்ண பூ முகம் சிரிக்கும் மூலம் நம் உள்ளம் களிப்போடு கனவு கண்டது என்ர ராசா காலம் கனிந்து வரும் கனவுகள் கண்டேன் அதில் உங்கள் நினைப்பு மிதந்து வரும் மனமுருகி கனவு கண்டேன் காலன் குறுக்கிடவே புரிந்து கொண்டு நல்ல காலம் இல்லை என்று அறிந்து கொண்டேன் பட்டு வேட்டி கட்ட கனவு கண்டேன் அது உரிமை பறிபோகும் கண்டேன் நான் வாங்கி வந்த வரம் இதுவே என புரிந்து கொண்டேன் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது காலத்தின் கணிப்பு நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ பராசக்தி தாயே தெய்வமே என் மனது தாங்கவில்லை காலனை உதைத்த அவரின் காலை பிடித்தபடி வணங்கி நின்றேன் என் காலை வாரி விட எப்படி மனம் வந்தது இறைவா இனி காலம் முழுக்க நாம் வெந்து நொந்து வாழ்வதா காலம் முடியும் வரை இது தொடர்வதா விரைவில் முடிவு விரும்புகிறேன் செல்வமே உங்களை நினைத்தால் நெஞ்சோடு நினைவுகள் நிறையும் செல்வத் திரவியப்பூ மானே தேடக் கிடைக்காத பொக்கிசம் கண்கொள்ளாக் கலைக்களஞ்சியமே பாச திருவுருவே உங்கள் கருணை ஞான விழிகள் எழுதும் கதைகள் சொல்லாமல் சொல்லும் கதைகள் முழுதும் எங்களின் விழி திரையில் நிதமும் படமாய் ஓடுதய்யா இந்நிலையை நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லை தெய்வமே என் இதயம் இருக்கிறதா இல்லை இறங்கி போய் விட்டதே என்ற உணர்வு தெரியவில்லை பாவி நாம் தவித்திருக்க என்ர ராசா உங்கள் பருவ வயதில் எந்த பயனும் அடையாமல் சென்றனையோ தெய்வமகனே உங்கள் சொரூபம் தோன்று தையா எம்மை எண்ணி நீங்கள் நெஞ்சுருகி கண்கலங்கி வெளிப்பட்ட விம்மல் இன்னும் எம் இதய விண்ணில் தணியவில்லை வேதனைக்கு எல்லையில்லை எங்கள் மனதுக்கு இனிய இன்பமே இனிய தரணி, தரணி உள்ளவரை உங்கள் நாமம் வாழ்க மனதாலும் நினைவாலும் நிஜத்திலும் நீங்கள் ஏக்கத்தோடு பார்த்த பார்வையும் எம்மை விட்டு நீங்காது நம்மை விட்டு பிரியப் போகிறேன் என நினைத்தாயோ எம் செல்வமே உடை உடல் உள்ளத்தாலும் புனித தூயவனே அர்த்தம் பொதிந்து ஆழப் பதிந்திருக்கும் உங்கள் அமைதியான அழகு வார்த்தைகளும் அனைவரையும் அன்புடன் ஆற்றுப் படுத்தும் திறன் கொண்ட செல்வமே

Tributes