Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 05 SEP 2020 Canada

பகுதி - 2 நம்மை விட்டு எட்டாத தூரம் சென்றனையோ நினைத்திருக்க மாட்டாய் என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என்ர ராசா கண்திறந்து நினைக்கையில் அருகில் வந்து இருக்கின்றாய் மனதில் தோன்றி சிரிக்கின்றாய் இது மதியின் மயக்கமா கலக்கமா கடைசி வரை யாரோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை நல்லொழுக்கமான தெய்வ மகனே தப்பித் தவறியும் தலைகால் புரியாமல் மாற்றமா தடுமாற்றமா யாரையும் ஏமாற்றவில்லை என்ன குணம் குரூரம் வன்மம் நிறைந்த வரை கூட பேதுற வைக்கும் நடுநிலையான குணம் என்னும் குன்று ஏறி நின்றார் உள்ளமே நம் மனச்சாட்சிக்கு நான் உங்களிடம் கண்ணோட்டத்தை முடியும் வரை எழுதுவேன் மனதில் எங்கே அமைதி முற்றிய சோகத்திலும் வாடிய முகம் கண்டு உங்கள் மெய் வருந்தி தானா வலிந்து வந்து உதவும் தன்மை என்னவாகும் இன்று நீங்கள் இல்லாமல் வாடி வதங்கி மனமும் உடலும் நொந்து நிற்கிறோமே பிரிவென்னும் பீழை பொறுக்க ஆற்றாது நீதி வழுவா நெறிமுறையின் வஞ்சப் புலன் ஐந்தின் வழியை அடைத்து உள்ளத்தை உயர்நிலையில் உய்த்த வள்ளலே செயற்கரும் செயல் செய்த செல்வனே தன் பெருமையை தான் உரையா தன்மை யானே அகழ்வாரை தாங்கும் நிலம் போல எல்லாரையும் பொறுத்தல் இறைவன் கடனன்றோ என எண்ணி நடந்தாயே திண்ணிய தோள்கள் தினவெடுத்த போதும் சமநிலை பெறும் ஆற்றல் பண்பு பெரிதென மதித்து எந்த அம்சத்தையும் செயலையும் எந்த நிலையிலும் கொச்சைப்படுத்தாத கொற்றவனே உயிரிலும் மேலாக மதித்த எம் உயிரிலும் மேலான செல்வமே சிரஞ்சீவியாக வாழ வேண்டிய நீங்கள் எம்மைவிட்டு போயிட்டீங்களே என் ஜீவன் சிவனோடு சேரும் வரை நாம் ஜீவிக்க வேண்டும் என் செல்வமே உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் உங்கள் நாமம் என்றும் வாழ வேண்டும் ஓர் ஆண்டு தினத்தையொட்டி நினைவுகூறும் அனைவருக்கும் நன்றியுடன் அப்பா அம்மா தம்பி தங்கை உற்றார் நட்புகள் சுகம் ஓம் சாந்தி

Tributes