Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 29 AUG 2020 Canada

பகுதி - 3 இயலாத நிலை கண்டும் ஏலாத அம்மாவை கூர்ந்து அவதானித்து பக்குவமாய் அன்பாய் தள்ளு வண்டியில் வைத்து தள்ளித் திரிந்து தன் மனச்சாட்சிக்கு உண்மையாக நடந்து மனநிறைவு கண்ட கருணையுள்ள கண்மணியே உங்கள் நாமம் வாழ்க ஏளனம் செய்யாய் யாரையும் ஒருமையில் பேசயாய் எதிலும் போதுமென்ற மனம் கொண்ட செல்வமே கசக்கும் வார்த்தையால் மனம் புண்படும்படி பேசயாய் ஒத்துழைக்காமல் வரமாட்டாய் சிரித்தபடி அன்புடன் கருத்து பரி மாறுவாய் அறிவுரைப்பாய் அறிவுக் கடலே உங்கள் பிறவிக் கடலில் பெரும் பதியை தாண்டமுன்னம் தாண்டவமாடும் தேவனே தவிக்கவிட்டார் எல்லாவற்றையும் விட்டு விட்டு போய் விட்டார் விண்ணை முட்ட கூவென்று கதறி கதறி அழ வேண்டும் போல் உள்ளது இடம் பொருள் ஏவல் இடம் தரவில்லை செல்வமே நீங்களே கதி என்று சரணாகதி காணும் உங்கள் நலம் வேண்டி தெய்வத்திடம் துதித்தோம் துள்ளி குதித்து ஓடும் நதி போல பயன் தந்து நடந்து சென்ற பெரியவனே விதி என்ற பேரில் விதியை மீறிய எம் மதி கெட்டாத பார் என்னும் பதியை விட்டு நாம் பார்க்க முடியாமல் கெதியா போயிட்டீங்களே விதியின் விபரீதமான விளையாட்டு உங்கள் நாமம் வாழ்க விதி என்றும் வினை என்றும் ஆறுதல் சொல்வார் இன்னும் விரதங்கள் இருந்திருக்கலாமே என்பார் தெய்வ நாமத்தை மட்டும் தினமும் சொன்னேன் நம்ப நாமம் நமச்சிவாயவே போகப் போறே என்றதும் அச்சப்பட வில்லை மச்சத்தோடு பிறந்து உயர் பண்புகள் உச்சத்தைத் தொட்டவர் மிச்சம் எல்லாம் எனக்கு விட்டுட்டு போய் விட்டாயே உங்கள் எச்சங்கள் விழுமியம் பேசும் செல்வமகனே உங்கள் நாமம் வாழ்க அன்புத் தங்கையின் பெரியண்ணா அருமை தம்பிக்கு அண்ணா சூரிய ஞானமே சுந்தரவடிவே சந்திரன் மகனே உங்கள் நாமம் வாழ்க அம்மா இயலாத வாய் இருக்குற அப்பா கோலம் மாறுகிறார் இழக்கப் போறமே என ஏங்கிய செல்வமே எதிர்பார்க்காமல் நான் இருக்க நீங்கள் போயிட்டீங்களே பாவி நாம் இதையும் தாங்கிய வண்ணம் இருக்கிறோமே பேரன்பு செல்வமே உங்கள் நாமம் வாழ்க ஓம் சாந்தி

Tributes