Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 17 MAY 2020 Canada

பகுதி 2 எத்தனை கேள்விகளுக்கு அமைதியாகவும் துணிச்சலாகவும் விடை தந்து பெருமைப்படுத்திய பெரியவா நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே எம்மை நல்வழியில் நல்ல வசதியுடன் கரைசேர்க்க முனைப்புடன் முன்நின்ற பெருந்தகையே நற்பண்பை பறை சாற்றிய நம் உள்ளம் நிறைந்த அன்பின் உறைவிடமே உங்கள் மனமும் கறை படியவில்லை எங்களுக்கும் கறை வைக்கவில்லை உங்களுடைய சிரமத்தின் மத்தியிலும் மனதினில் மகிழ்வாக ரசித்த வண்ணம் உம் சிரசினில் சுமந்த பெரியவராய் ஒரு குறையும் அற்ற கண்ணிறைந்த கண்மணியை நேசமுடன் பாசம் வைத்த செல்வத்தை பிறைசூடிய ஈசனே மறையோதும் பரமனே காட்டி பாதியிலேயே மறைத்தது ஏன் ஏன் இறைவா உன் குறை அல்லவா இன்று நாம் கண்ணிருந்தும் கண்ணிழந்து அந்தகன் போல் அந்த ரித்து திரிகின்ற ஓமே எம்மை அளவுகடந்து அன்போடு ஆதரித்த எம் செல்வமே ஆருயிரே உங்களை எண்ணி நாம் கொஞ்சும்போது ஆசை அல்லவா தொட்டிலில் நிதர்சனமான உண்மை அல்லவா பாடையில் எம்மை அல்லவா நீங்கள் வழி அனுப்பி இருக்க வேண்டும் அதை விடுத்து உங்களை நான் அனுப்பியது இறைவா எந்த விதியில் நியாயம் விதியின் கரங்களில் விழுந்து பயணம் செய்தோம் அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது கறந்த பால் மடி ஏறுமா யாரைச் சொல்லி என்ன பயன் எங்கள் கதைமுடிய முன்னம் உங்களைப்பறிய விட்டு ஏங்கி தவிக்கிறோம் சில சமயம் நாம் உறங்கும் வேளையில் சிறு அரவம் கேட்டாலும் எங்கள் தூக்கம் கலையாமல் இருளில் வெளிச்சம் போடாமல் யாரோ என்னவோ என துப்பறியும் நிபுணரை போல் தன்னந்தனியே சுற்றி வட்டமிட்டு ஐம்புலன்களாலும் துருவித் துளாவிய மெய்ப்பாதுகாவலனே எல்லாம் இன்று சொப்பணம் தானோ அற்புதம் பொய்யோ உங்கள் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நீராடியும் கடவுள் கருணை காட்ட வில்லையே அருமையான மைந்தனே உன் தாய் தந்தை சகோதரங்கள் மகிழ எம் சிந்தை நிறைந்த தெய்வமகன் எந்தை இருக்க சென்றது என்ன விந்தை முந்தை வினையா காண வேண்டிய பரவசப் கோலங்கள் பல இருக்க அதன் கதவுகளை மூடிவிட்டு எம் கண்களில் ஏனிந்த நீர்க்கோலம் காலமே பலன் கொண்ட எம் மகனுக்கு ஏன் இப்படி ஒரு பலன் உயிர் தான் தானம் என்றால் காய்ந்த மட்டை என்னைய் எடுத்து என் மகன் பச்சை மட்டையை வாழ வழியமைத்துக் உதவி இருக்கலாம் அல்லவா எம் நொந்த இதயம் வெந்து போகிறதே வெடித்துச் சிதறினால் அமைதி அடையுமே இறைவா ஓம் சாந்தி

Tributes