Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அப்பா 01 AUG 2020 Canada

பகுதி 1 திடகாத்திரமான அன்பும் பண்பும் நிறைந்த அழகு சித்திரமே என்ன விசித்திரம் அவ்வளவு பத்திரமாய் நடந்து வந்த உங்களை பாத்திரமானவர்கள் வேதனைப்படுத்தி இருக்கும் என்பதை உணர்கின்றோம் நாம் கிலி கொள்ளப்படாது என்பதற்காக எதையும் கூறாமல் வலியோடு வலியைத் தாங்கிய வீரனே மானம் உயிரினம் மாண்புடைய என்று வாழ்ந்த பெரியவனே வெற்றுரை என்றும் பகிரவில்லை தாராள சிந்தை கொண்ட செல்வமே என் நிலையிலும் அவர் கையேந்தாத தொல்லை இருக்கக்கூடாது என்பதற்காக எல்லோரிடமும் ஒரு எல்லை வைத்து பழகிய பெருமகனே பிடிப்பு இருந்தும் பிடிவாதம் இல்லை நெஞ்சம் சலிக்கவில்லை புரவலனே கட்டி ஒரு வாரிசை விட்டுச் சென்றிருந்தாலும் ஒரு ஆறுதல் பெற்று இருப்போமே உங்கள் பொன்னழகை பார்ப்பதற்கும் போதை முத்தம் சேர்ப்பதற்கும் இருமனம் சேர்ந்தால் மோகனப் புன்னகையில் முத்தமிழும் தவழுமே தலையணை மந்திரம் அறியவில்லை ஒரு துணை வந்து ரகசியம் படிக்கவில்லை தனக்கென்று தனி உரிமம் கொடுக்க வில்லை நன்மை தீமை உரைக்கவில்லை சாஸ்திரம் சாதிக் அவர்கள் சாவைப்பற்றி மறைமுகமாகவும் கூறவில்லை உங்களிடம் அகந்தை வரவில்லை அது அற்புதம் பக்குவம் தவறி யாரும் உங்களிடம் நடக்கவில்லை அது அமைதியான உங்கள் மரியாதையின் வெளிப்பாடு வெந்த புண்ணில் வேலைப் பாய்கிறது ஐயா தங்க வர்ணம் கிளியே பறந்து சென்றாலும் உங்கள் சொந்த வண்ணம் தோன்றுதே யாரையும் விமர்சிக்க மாற்றார் விமோசனம் கூறுவார் காலம் கடந்தாலும் நீங்கவில்லை உங்கள் நினைவுகள் நெஞ்சம் தாங்கவில்லை

Tributes