Clicky

Born 11 JAN 1981
Rest 30 OCT 2019
Late Tharaneeharan Manoharan
Age 38
Late Tharaneeharan Manoharan 1981 - 2019 Jaffna, Sri Lanka Sri Lanka

Tribute

அம்மா - ஞானவதி 18 JUL 2020 Canada

பகுதி 1 உள்ளம் உருகுதையா உங்களை காண்பதற்கே அள்ளி அணைத்திடவே எமக்கு ஆசை பெருகுதையா நாம் நித்தம் கைதொழுது நினைந்த வண்ணம் உள்ளோம் நீங்கள் வாழ்ந்த காலம் கொஞ்சமே வாழும் நினைவுகளுக்கு இல்லை பஞ்சம் நீங்களே தஞ்சமென நீ இருந்தோம் இறைவா பொறுக்கவில்லையா ஏன் இந்த வஞ்சம் என் செல்வமே சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடுமே அழகெனும் ஓவியம் எங்கே எம் இலக்கிய காவலன் எங்கே முத்தமிழும் ஆங்கிலமும் இனிமை கண்டோம் உங்கள் விளக்க உரை நடையில் ஒவ்வொரு அசைவும் நினைவூட்டுவது மறக்க முடியுமா கழுவி குளிப்பதும் தவிர மற்றும்படி மேல் சட்டையை கழட்ட மாட்டார் கண்படும் என்று நினைத்தாயோ பொடி நடையாக வேகமா சிலைகளின் வடிவே கலை அழகே நீ நடந்தாய் எங்கள் ராசா என்ன அழகு உடலும் உள்ளமும் தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது பொன் அல்லவா நிறத்தை தந்தது களங்கமற்ற சமநீதி நல் மனதை தந்ததோ ஒளிவு மறைவில்லாமல் உள்ளம் நல்லாரை நன்மை அடையும் ஞான ஒளியை தந்ததோ நேர்கொண்ட பார்வை கொண்டு அன்பை பொழிந்தாயே கைகளில் வாரி வழங்கிய வள்ளல் வாரி அணைத்த தன்மையும் எங்கே முகர்ந்து முத்தமிட்டு முகம் எங்கே பேசிப் பழகிய இனிமையும் தோற்றமும் எங்கே ஓடி ஆடித் திரிந்து பூத்த இன்பங்கள் எங்கே நெஞ்சம் நிறைந்த கனிவோடும் பணிவோடும் கூர்ந்து அவதானித்த நிலையிலும் இயலாத நிலையிலும் தாய் தந்தை சகோதரங்கள் என்ன நிலையில் உள்ளார்களோ என தேடி நாடிய உதவி பார்த்து தன்மை எங்கே பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே கோபம் கொள்ளாமல் வழிநடத்திய பக்குவம் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் நீரில் கலந்து போனது எங்கே எங்கள் விம்மலும் தணியவில்லை தூங்கவில்லை பதட்டம் அடங்கவில்லை உங்களை நினைந்தே கனவை வளர்த்தோம் எண்ணாமல் இருந்ததில்லை என் அருகே இருந்தால் உலகமும் உள்ளங்கைக்குள் என் செல்வமே ஞானத்தங்கமே ஆட்டம் ஆரம்பிக்கவே ஆடவல்லான் அழைத்தது ஏனோ என் பழி செய்தோம் யார் குடியை கெடுத்தோம் ஆனால் கொடுமை கொடிய நோய் தந்து எம்மை முடக்கியது போதாமல் நம்மை வாட்டி வதைக்க வேண்டும் என்று வாட்டசாட்டமான மகனை அழைத்து ஏன்

Tributes

Notices

Obituary Thu, 31 Oct, 2019
Thankyou Message Fri, 29 Nov, 2019
1st Year Remembrance Tue, 06 Oct, 2020
2nd Year Remembrance Sat, 30 Oct, 2021
3rd Year Remembrance Thu, 27 Oct, 2022
4th Year Remembrance Mon, 30 Oct, 2023
5th Year Remembrance Wed, 30 Oct, 2024