Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 29 AUG 2020 Canada

பகுதி - 2 கற்றார்க்கும் கல்லார்க்கும் களிகாக்கும் களிப்பே நினைக்க பெருமிதமும் ஊறும் சகல வழிகளும் கைகொடுத்து தாங்கிய தீரனே தெய்வமே அருமையான புதல்வனே உங்கள் நாமம் வாழ்க நாம் தவறியும் தாழ்ந்து விட படாது தோற்று விடக் கூடாது என்ற நாணம் கொண்ட நேர்மையான தரணி உங்கள் நாமம் வாழ்க எம் கண்ணில் நீர் வழிந்தால் உன் நெஞ்சில் உதிரம் கொட்டும் ஐயா நெஞ்சின் இனிய பெருமகனே நின் உயிர் போய்விட்டது உங்களைப்பற்றி நின்றோம் பாச உணர்வுடன் இனி பற்று அறுப்பது சாத்தியப்படுமா நடக்கக் கூடியதா பெரும்பற்றப் புலியூரானே படும் பாடு கொடும் வேதனை இனிய செல்வம் தரணியின் நாமம் வாழ்க யாரையும் வஞ்சிக்காது பிறர் உரிமம் இல்லாத எதையும் அண்டாத பிறர் பொருளில் துளியளவும் ஆசைப்படாத சூழ்ச்சி சிறிதேனும் இல்லாத உத்தமபுத்திரன் சத்திய ஒளி எங்கள் தரணி உங்கள் நாமம் வாழ்க திருவாசகம் என்னும் தேனை ரசித்த மகாதேவர் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போல் மானமே பெரிதென மதித்த தேன் போன்ற எம்பெருமகனையும் விரும்பி அழைத்தாயோ எங்கள் ராசாவே

Tributes