Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 12 SEP 2020 Canada

பகைவனுக்கும் இரங்கும் நன்னெஞ்சே எம் இனிய தரணி இத்தரணியில் புங்கை யூர் தந்த புன்னகையாளன் இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர் வாக்குக்அமைய எல்லோருடனும் எப்போதும் எந்த நிலையிலும் இன்முகம் காட்டி சிரித்த வண்ணம் பழகிய பெருந்தகையே பெற்றோர் உடன்பிறந்தார் உற்றார் மற்றவருடன் பற்றொடு பாசம் வைத்து பழகிய பண்பாளன் இருந்த போது இகபர சுகம் கண்டோம் சமத்துவத்தின் தனித்துவமே ஒற்றுமையின் மகத்துவம் என உணர்ந்த சத்தியவான் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை உடன் வைராக்கியமாக இருந்த உங்களை வைத்திய பணி வந்த நோய் பிணியை தணிக்கவில்லை எங்கே தவறு தவறி நடந்தது என ஐயம் எழுகிறது நெஞ்சம் தணியாத சோகம் பாலன் உயிர் பரிதாபமாக போய்விட்டதே நாங்கள் வீடு திரும்ப தாமதம் ஏற்பட்டாலும் பதறித் துடித்துப் போய் தேடுவாய் இன்று உங்களை காணாமல் தவிக்கிறோம் நாம் தடுமாறும் போது நிதானமாக எங்களை வழி நடத்திய தெய்வமகனே வழிகாட்டியே என்ன பொல்லா வினை வந்து மூடிக் கொண்டதை நாம் அறியோம் பராபரமே கணீர் என்ற ஓங்கார ஓசை நினைக்குந்தோறும் ஆசை அகங்காரம் அற்று நிதானமான அன்பான பக்குவம் சிங்காரமான மின்னல் போல் ஒளி நிறைந்த அழகு அலங்காரம் தேவையில்லை அப்படி அழகு இரு தினங்களும் உயிரெனும் காற்று உடம்பை விட போகுது என்பதை முற்றாக அறிந்ததும் உயிரை துச்சமென மதித்து எம்மை மதித்து சிரித்த வண்ணம் இருந்த இனிய செல்வமே கண் நுதலான் தன் கருணை எம்மைப் பார்த்து கண் காட்ட வில்லையே நான் இருக்கப் போய்விட்டாயே? எங்கள் மனம் தூங்கவில்லை உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி

Tributes