Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெற்றோர் 27 JUN 2020 Canada

பகுதி - 2 இடுக்கண் வந்த போதெல்லாம் நீயா முன்வந்து தாராளமாக தாங்கி நின்றாயே செல்வமே கடவுள் உங்கள் வாழ்க்கையில் நல்வாழ்வு தரவில்லையே ஆனால் இறுதிப் பயணத்தின் போது வருந்தாது ஆசியுடன் தெய்வம் அழைத்துச் சென்றதே இழந்து தவிக்கின்றோம் ஆசைக்கு ஆசை வைத்து அத்தனையும் நெஞ்சுக்குள்ள பூட்டி வைத்து ஓம் செல்வமே நாம் பார்க்காத போது மெல்ல பின்னால் வந்து என் தலையை வருடி மகிழ்வாய் நமக்கு கொஞ்சம் விழங்கியிருந்தால் உங்கள் அன்பை வெளிப்படையாகக் காட்டி இருப்போமே எங்கள் அறிவு தெளிவு காணவில்லை இப்படி என்றால் எங்கள் மனம் திறந்து உங்கள் மனம் நிறைந்து இருக்கும் அல்லவா எங்கள் அனுபவம் நீங்கள் அனுபவிக்க உதவவில்லை நாங்கள் போய்விடுவோம் நீங்கள் நீடூழி வாழ்வீர்கள் என்று எண்ணியிருந்தோம் திடீரென நோய் கொண்டதை நாம் அறியவில்லை நீங்கள் வெளிக்காட்டாமல் துணிச்சல்மிக்க அமைதியுடன் நடப்பதை எதிர்கொண்டீர்கள் உங்களை காப்பாற்ற இன்னும் பல வழிகளை கையாண்டு இருப்போமே போய்விட்டாயே செல்வமே எங்கள் மனம் நடுங்குகிறது அகமும் புறமும் எம்மை உருகுதய்யா இதயம் பல ஆயிரம் தொளை போட்ட மாதிரி வேதனைப்படுகிறது அறிவு சொல்லுது ஆறிலும் சாவு நூறிலும் சாவு உங்கள் ஆயுள் இடையே போயிட்டு மனது கேட்கவில்லை அத்தனையும் இழந்து போல் உடல் இயக்கம் நின்றது போல் உழைப்பும் களைப்பும் சோர்ந்து போகிறது தினந்தோறும் அழுகை அது மனதில் தோன்றும் கவலை தினந்தோறும் நினைப்பு நினைவில் உலாப்போகும் உணர்வு அறம் தவறாத மறத்தமிழன் மலையே சிதறி உடைந்து மாதிரி மனநிலை எமக்கு இன்று ஓய்வில் உள்ளேன் தாராள நேரம் உண்டு உன் அறிவின் துணையுடன் உன் வழிநடத்தலில் எங்கெல்லாம் நிம்மதியாகப் போய் வரலாம் நீங்கள் இல்லையே குருதி ஓட்டம் நின்று போவது போல உணர்வு யார் கண்பட்டதோ மனம் புண்பட்டு இதோ இந்தப் பாதிப்பு இறைவா இது வெறும் பாதகமாக பிடுங்கிக் கொண்டு போய் விட்டாயே எங்கள் தனிப்பெருங் கருணையே உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் எல்லாத்துக்கும் தலை கொடுத்து முழு மனநிறைவையும் மகிழ்வையும் தந்த செல்வமே ஓம் சாந்தி

Tributes