Clicky

பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
வயது 38
அமரர் தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அம்மா , ஞானவதி 12 JAN 2020 Canada

அன்பு மலரே அழகு தமிழே தங்கப்பதுமை. ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே அன்பை ஊட்டி அரவணைத்தாய் அறிவைப் புகட்டி வாழவைத்தாயே. தெம்பை தந்து நடை பயின்றாயே. தெளிவுபடுத்தி விளங்க வைத்தாயே. இனிமை செல்வமே! அம்மா எனும் உயர் பதவியை எனக்கு முதலில் தந்தவர் நீயே தங்கக் கோபுரம் போல் இருந்தாயே பார்வையில் பொருள் ஆயிரம் தந்தாய் பொறுப்பைச் சுமந்து பொறுப்புடன் செய்தாய் பொறுமைக்கு என்றும் தரணியே நீ உன் தனி வழி பாதை தந்தது பெருமை சந்தித்துப் பேசும் இனிமை அப்பா அம்மா இன்னும் விழித்திருக்க உன் கண்களை மூடி சென்றது ஏனோ? இது எமக்கு பெரும் தண்டனையும் பெரும் கொடுமையும் அவ்வளவு கொடியவர்களா நாம்? நினைவுகள் அனைத்தும் நிழலாட நிம்மதியின்றி வாடுகிறோம் 40 ஆண்டுகள் தொடர்கதை போல் நான் வரிந்து வலியுடன் வாழ எம்மை விடுத்து தெய்வம் உன்னை வரிந்துகட்டி அழைத்தது ஏன். தினந்தினம் எங்கள் மனம் பதைபதைக்கிறது என்னைப் படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை! எம்மைவிட்டு போய்விட்டாயே நம் பெரியவனே உன்னைப் பெற்ற வயிறு விடாமல் துடிக்குதையா என் கனவில் வந்து காட்சி தெரிகிறது முடிந்ததும் கனவு மறந்து போகிறது. கட்டி போயிருந்தாலும் இப்ப என்னை தட்டி கொடுக்குமே ஆறுதலுக்கு அழுகை தீரவில்லை எமக்கு, இருந்தும் தெய்வத்தின் தொழுகை மறைக்கிறதே நோய் கண்ட போதும் அடக்கி தாங்கியே வைத்தாய் கலங்கவில்லை வேதனை முனகவில்லை இதை புரிந்து கொள்ளும் அறிவு நமக்கு வரவில்லை இறந்த பின்பு கலங்குகின்றோம். எம் இதயத்துக்கே பொறுக்கவில்லை. செல்வமே எதை இழந்த போதும் மனம் தளரவில்லை உனை இழந்தபோது நிலைகுலைந்து போனோம் மதிமயங்கி கதிகலங்கி நிற்கிறோம். உண்ணாமல் இருந்தென்ன உறங்காமல் விழித்தென்ன தினந்தோறும் அழுதென்ன எண்ணாத எண்ணமெல்லாம் கற்பனையில் கரைகிறதே எதையும் தாங்கும் இதயம். இதையும் தாங்குமோ எங்கள் ரத்தத்தில் பூத்த புன்னகை மலரின் வாசம் எங்கே? போன தேசம் எங்கே? இது பெரும் மோசம் தெய்வமே பாசம் வைத்தது பெரும் குற்றமோ, நாசம் செய்து போட்டாயே இறைவா நான் போட்ட கோசம் கேட்கவில்லையோ? நேசம் வைத்த செல்வமே விட்டுப் போய் விட்டாயே! அறிவுக்கும் நினைவுக்கும் எட்டவில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!

Tributes