கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மூவாண்டின் முத்தான நினைவலைகள்
திருமதி. தையல்நாயகி கந்தையா
எமதருமை அம்மாவே !
பூவுலக வாழ்க்கையை நிறைவு செய்து
ஆண்டவன் அடியில் ஆறுதல் அடைந்து
இன்றுடன் மூவாண்டு ஆனபோதும்
முத்தான நினைவலைகள் நெஞ்சில்
கொத்து கொத்தாய் பூக்குதம்மா
நேரில் தான் பார்க்க முடியவில்லை என்றாலும்
எம்மோடு நீங்கள் அருகில் இருப்பதனை
எம்மால் நன்கு உணர முடிகின்றது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நம்மை நன்கு வாழவைத்து
வானுலகம் சென்ற உங்களை
வணங்கி எம் கோடானு கோடி நன்றிகளை
கண்ணீர் பூக்களுடன் சமர்ப்பிக்கின்றோம்
அன்றும் இன்றும் துணையாக இருந்த நீங்கள்
என்றும் எம்மை வழி வழிநடத்துவீர்!
************************************
அம்மா !ஓடி வந்து உம்மை கட்டியணைத்து முத்தமிட்டு
அம்மா! அம்மா! என வாய் நிறைய அழைக்க வேண்டும் போல் தோன்றுதம்மா
உம் மடியில் முகம் புதைத்து உள்ளக் குமுறல் எல்லாம் கொட்டிவிடத் தோன்றுதம்மா
உம் காலிரண்டைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்போல் தோன்றுதம்மா
இது காலம் செய்த கோலம் ,காலம் கடந்த ஞானம் ,கண்ணீர்தான் மீதம்
கலங்குகின்றது உள்ளம் நமக்கு கடவுள் தான் தஞ்சம்
ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை
தாயின் அன்பு ஒன்றேபோதும் இவ் அன்புக்கு ஏது எல்லை
தாயன்றி தெய்வம் இல்லை நம் தாய்க்கு நிகர் யாரும் இல்லை
தாயை போற்றி வாழ்வோர் வாழ்வில் சோடை போவதில்லை
அம்மா! அம்மா! எந்தன் ஆருயிரே! நானும் நீயும் என்றும் ஓருயிரே !
என் கண்ணின் மணியே! தெய்வம் நீயே !
அம்மா! நீ சுமந்த பிள்ளை இன்று சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே !
அன்னை ஓர் ஆலயம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !ஓம் சாந்தி !
Write Tribute