1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
35
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-04-2022
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
அன்பால்
என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்