2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
35
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கந்தையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்தும் ஈர விழிகளில் நீயம்மா!
எழில் மிகு எங்கள் இல்லற நந்தவனத்தின்
குல விருட்சம் நீயம்மா!.
காலப்புயல் வந்துன்னை எடுத்துச்சென்றதேனம்மா?
அன்புடை நதியென நீயிருந்து நீராட்டிய எம்
நெஞ்செலாம் நீயின்றி காய்ந்து வறண்டு
காயங்கள் ஆனதம்மா!
உன் குலக்கொழுந்துகளின் வாழ்விங்கே
கறவைப்பசுவை இழந்த கன்றுகள் நிலை போல்
துயராகிப்போனதம்மா!
நீ இறந்தும் இறவா உயிரின் துடிப்பாய்
இன்னமும் எங்கள் இதயங்களின் துடிப்பில்
நித்தியம் வாழ்கிறாய்!
உன்னை நெஞ்சில் நினைவேந்தி
வணங்குகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்