எமதருமை அம்மாவே எம்மை எல்லாம் தவிக்கவிட்டு நீங்கள் இறைவனடி சேர்ந்து இன்று ஈராண்டு ஆனபோதும் எங்கள் ஈரவிழி காயவில்லை எம் துயரோ தீரவில்லை உங்கள் பாசம் பரிவு பார்வைக்கு பரிசத்திற்கு பாரினில் நாம் ஏங்குகின்றோம் அனுதினமும் தாளாது தவிக்கின்றோம் வீற்றிருந்தாள் அன்னையவள் வீதி தன்னில் வீற்றிருந்தாள் நேற்று இருந்தாள் அன்னையவள் இன்று மண்ணில் நீறானாள் ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம் மாநிலத்தே என்ற பழந்தமிழ் பாட்டுகளை நீங்கள் கூற பல்லாயிரம் முறை கேட்டதுண்டு - ஆனாலும் பட்டால் தானே தெரிகிறது பாசம் என்பது என்னவென்று - உயிரை விட்டால் தானே புரிகிறது தாயின் அருமை என்னவென்று பூவுலக வாழ்வே வெறும் மாயை என்று சந்திரனில்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லா சேனை போல...... இந்திரகிரியும் இன்றெம்மோடு இந்நிலைக்காளானதே உங்களை இழந்ததாலே இனியென்ன செய்வோம் நாமே அன்னையுமாய் தந்தையுமாய் அருகிருந்து அரவணைத்து அவனியிலே நாம் வாழ அனுதினமும் துணையிருந்தீர் பசுமையான நினைவுகளுடன் பாசத்தைத் தேடுகின்றோம். ஆத்ம ஜோதியாக அருளியல் உலகில் இன்று வாழும் நீங்கள் என்றென்றும் எமை வழிநடத்த அனைத்திலுமே துணையிருக்க அன்பெனும் மலர்கள் தூவி அஞ்சலி செய்கின்றோம். "சந்ததமும் உம் நினைவு சாகாத நம் நினைவே" என்றும் உங்கள் நினைவுகளுடன் அன்பு மகன் ரவிசங்கர் அருமை மகள் நிவேதிகா ஆசை மகள் நந்திகா