யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கந்தையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை அம்மாவே தன்னிகரில்லா தாயே
பெற்றோர்களுக்கு அருமை மிகு மகளாய்
சொந்தங்களில் பன்னிரு சகோதரர்களுக்கு பாசமிகு ஒற்றைச் சகோதரியாய்
சீரும் சிறப்புடனே வாழ்ந்து தாயை தாய் மண்ணை தமிழை வாழ்ந்த வீட்டை நாட்டை நேசித்து
அன்னிய தேச மோகமின்றி அன்பின் உறைவிடமாய் அறிவுப்பொக்கிஷமாய்
பண்பாடு கலாசாரங்களை மதித்து வாழ்ந்து
விருந்தோம்பலில் சிறந்து விளங்கி தான தர்மங்கள் செய்து
அன்னையாய் தந்தையாய் தோழியாய் மந்திரியாய் அனைத்துமாய் நீங்களிருந்து
அம்மம்மா துணையுடனே எமை பண்புடனே
அற நெறியில் வழி நடத்தி ஆளாக்கி
மிகுந்த தன்னம்பிக்கை சுயமரியாதை கொண்டு
தடைகள் வந்தபோதும் தளராது உறுதி கொண்டு
இரும்பு பெண்மணியாக இறுதி மூச்சு உள்ளவரை
இறைபக்தியுடனே இரும்பு மதவடியில்
இந்திரகிரியிலே வாழ்ந்து அநியாயத்தை எதிர்த்து
நியாய தர்மங்களுக்கு போராடி வெற்றி கொண்டு
சமய இலக்கிய பாட்டுகளை இடம் பொருள் ஏவல் அறிந்து
கணீரென்ற குரலில் கம்பீரமாய் எடுத்துரைத்து
தமிழ் கணித புலமையினால் சுடோக்கு குறுக்கெழுத்து என
பல போட்டிகளில் முத்தான கையெழுத்தில்
பங்கு பற்றி பல பரிசுகளை வெற்றி கொண்டு நமக்காகவே வாழ்ந்து
சட்டென்ற நொடியில் சிட்டாகப் பறந்து
நீங்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் மூவாண்டு ஆனதுவோ
“சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லாச் சேனைசுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதரில் வாழ்வுதந்திகள் இல்லா வீணை இவை யாவும் போலஇந்திரகிரியும் நாமும் உங்களை இழந்ததாலே இந்நிலைக்கு ஆளானபோதும்இதயத்தில் உமை என்றும் இருத்தி இறையாகத் தொழுவோம் நாமே ““சந்ததமும் உங்கள் நினைவு சாகாத நம் நினைவே “
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தங்கள் நினைவில் வாழும் குடும்பத்தினர்
மக்கள் மருமக்கள் பேரப் பிள்ளைகள் சகோதரர்கள்