Clicky

தோற்றம் 25 SEP 1971
மறைவு 10 DEC 2019
அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
வயது 48
அமரர் தர்மதர்சினி கிருபாகரன் 1971 - 2019 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ms Mangayarkarasi Gopalakrishnan,Sivakumaran.Balachandran, Kumaraguruparan.B, Gnanasegaran.B 15 DEC 2019 Canada

எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!!  மச்சாளே,மாம்பழமே  ,எங்கள் மாமி  பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என   ஏங்கி ஏங்கி அழுகின்றோம் .தேனே!! திரவியமே!! தெவிட்டாத தெள்ளமுதே!! உனை தேடி வந்து காண்பதெப்போ? மாடி மனையிருக்க நீ பெத்த மக்கள் கதறியழ ,தாலி கட்டிய கண்ணாளன் தவித்து நிற்க சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்ததேனோ?பெத்த வயிறலைத்து  பெத்த தாய் புலம்புகின்றாள் .மேகத்து மின்னலாய் நீ மின்னி மறைந்ததேனோ?உடன் பிறந்தார் எல்லோரும் உருகி மடிகின்றார் நாங்கள் கொஞ்சி வளர்த்த தர்சினியே!! பொல்லாத உறக்கம் ஏனோ?காலா வாடா உன்னைக் காலால் உதைப்போம் என்று சொன்ன முண்டாசுக்கவியையும் காலன் கவர்ந்து போனான் .ஆறாது ஆறாது அழுதாலும் தீராது உன் இழப்பு .வழி மேல் விழி வைத்து உன் வரவு பார்த்து நிற்போம்.மானிட ஆன்மா மரணம்  எய்தாது என்றான் கீதையிலே கண்ணன்.உந்தன் ஆன்மா சாந்தி பெற தோன்றா துணையை வணங்கி நிற்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!