4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
1971 -
2019
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
35
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 25-11-2023
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
நான்கு நாட்கள் போல் தெரிகிறது உன் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை!
மறைந்திட்டாயோ என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைகின்றது..
வாடிய எமை வதைத்து வாழ்வே வெறுப்பேற
நீ மட்டும் எமைவிட்டு நெடுந்தூரம் போனாயோ?
காலங்கள் எல்லாம் வாழ்வதாய் என காத்திருக்க
காலன் உன்னை அழைத்ததென்ன?
கண்ணீரில் எமை விட்டு.....
நெஞ்சில் நீங்கா துயர் இட்டு
நீ போன தென்ன எமை விட்டு.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...