Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 SEP 1971
மறைவு 10 DEC 2019
அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
வயது 48
அமரர் தர்மதர்சினி கிருபாகரன் 1971 - 2019 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 17-11-2021
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு,
நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை,
தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும்
நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே எங்களுடைய அம்மா
எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தீர்கள்,
நீங்கள் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதைத் தவிர
எங்கள் வலிகளின் மருந்து உங்கள் சிரிப்பு மட்டுமே அம்மா
எங்கள் அம்மாவின் சிரிப்பு கவலை நீக்கும் மருந்து,
அதை மறுமுறை பார்க்க காத்து இருக்கும்
உங்கள் அன்புச் செல்வங்கள் உங்கள் கீர்த்திமா,அச்சுனீ ️
வருடங்கள் இரண்டு கடந்தது அம்மா
நான் என் வசந்தத்தை தொலைத்து
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லி தந்துவிட்டு
என்னை நடுவீதியில் விட்டு சென்றதென்ன?
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தும் நீயின்றி நான்
அநாதையாய் தான் வாழ்கின்றேன் அம்மா
உன்னோடு வாழும் போது கிடைத்த நிம்மதி சந்தோசம்
இப்போது வெகு தொலைவில்
ஏன் என்னை இப்படி நிர்கதியாக்கினாய் அம்மா?
என் தர்சினி நீயில்லாமல் நான் அநாதையாய்,
கோழையாய் வாழ்கின்றேன் அம்மா
என் மொத்த தைரியமும் நீயாய் இருந்துவிட்டு
சடுதியில் விட்டு சென்றதன் மர்மமென்ன?
நான் விடும் ஒவ்வொரு மூச்சும்
உன் நினைவிலேயே கழிகிறது அம்மா
நீ விட்டுச்சென்ற கடமைகளுக்காக தான்
நான் என்னை நானே வழிப்படுத்தி வாழ்கின்றேன் அம்மா!
என்னோடு சேரந்து நீயும் வழிநடத்துவாய
என்ற நம்பிக்கையில் உன் ஆதமா சாந்தியடைய
இறைவனை வேண்டும் உன் அன்பு ️கணவன்️
எங்கள் நெஞ்சங்களில் என்றும்
நிலையாய் நிறைந்த அன்பு மகளே!
ஆசைச் சகோதரியே! நித்தமும் உம்மை
நினைத்து மனம் ஏங்கித் தவிக்கின்றது
கண்ணெதிரில் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் கனக்கிறது எம் கண்களில்
நீர் சொரிந்து கலங்கின்றோம்
உம்மை காண உன் குரல் கேட்க
எங்கள் கண்கள் இங்கு தேடுகின்றது
நீர் இம் மண்ணில் மீண்டும் வருவாயா?
என் செல்ல மகளே! உயிர் சகோதரியே!
ஆண்டாண்டு காலம் சென்றாலும்
நீர் எங்களுடன் வாழ்ந்த காலங்களை
எப்பவும் நாங்கள் மறக்கப் போவதில்லை இம் மண்ணுலகில்
தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices