திதி: 13-12-2024
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் அம்மா
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையில் இன்று
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை கலைத்து விட்டான்
காலன் உன்னைக் கவர்ந்து
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...