யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-12-2022
முதலில் எனக்குத் துணைவியானாய்
பிறகு என் தோழியானாய்
ஒவ்வொரு வினாடியும் என்
நாடியோடு நாடியாய் கலந்திட்டவளே!
நிறைவாக மணவாழ்வில்
நிறைவுடன் வாழ்ந்தோம்
பெற்றோரும் உற்றோரும்
களிப்புற கண்டோம்!
அறமோடு அன்பாக பணிகள்
ஒரு மனதாய் ஆற்றினோம்
பேச்சினிலே நீ!
சுவாசிக்கும் மூச்சினிலும் நீ!
எதிலுமே நீ! எல்லாமே நீ!!!!!
காலை கண்விழித்த நொடி முதல்
உன் ஞாபகங்கள் உன் நினைவுகள்
எங்கள் மனதில் அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை,
நரகமாய் உள்ளது!!
இம் மண்ணில் எம்மை மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும்
உமது
எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும்
எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள்
எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உன் அன்பு பொங்கும்
அழகு முகம் பார்க்காமல்
உன் பாசக் குரல் கேட்காமல்
உன் நினைவுகளுடன் வாழ்ந்து
இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆனதே
அன்புச் செல்வமே!
ஆருயிர் சகோதரியே!!
எத்தனை காலங்கள் கடந்தாலும்
நாங்கள்
உம்மை இழந்த துயரை
ஈடுசெய்ய முடியாமல்
இன்னும்
இங்கு கலங்கி நிற்கின்றோம் அம்மா!
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்ணில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க எம்மை விட்டு
ஏன் சென்றீர்?
அன்பு மகளே! அருமை சகோதரியே!!
ஆண்டுகள் சென்றாலும் ஆறவில்லை எம் மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது உன் நினைவுகள்!
அம்மாவை இழந்து மூன்று வருடமாகி விட்டது.
அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை.
அம்மா....
வெறும் வார்த்தைகளில் சொல்லிட முடியாத உறவு...
என் உயிர் கொடுத்த தாய்க்கு இன்று உயிர் இல்லை...
அம்மா நீங்கள் உங்கள் கருவறையில்
எங்களை 10 மாதங்கள் மற்றும் சுமக்கவில்லை
ஆனால் உங்கள் இதயத்தில்
எங்களை பல ஆண்டுகள் சுமந்தீர்கள்..!!
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து மூன்று ஆண்டுகள்..!!
இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும்
நீங்கள் எங்கள் இதயத்தில் வாசம்
செய்து கொண்டுதான் இருப்பீர்கள்..!!
உயிர் தந்த தாயே உங்களை நினைத்து அழும்
உங்கள் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல...
வரமாட்டீங்களா?
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...