யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மதர்சினி கிருபாகரன் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று Toronto கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்(தர்மரெட்ணம் Bros - Colombo), மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேசு ராசமணி(SPN & CO -Colombo) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருபாகரன் அவர்களின் அருமை மனைவியும்,
கீர்த்தனா, அஸ்வின் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
தர்மநிதி, தர்மஞானி, தர்மசேனன், சந்திரசேனன், அனுராதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுரேஷ்குமார், காலஞ்சென்ற சிவகுமார், கிரிஜா, ஜீவா, விக்னேஸ்வரன், கீதா - சதாரூபன்(கொழும்பு), மாலா- நாகலிங்கம்(சுவிஸ்), திபாகரன் - சிவமலர்(லண்டன்), ஜீவா- சந்திரசேனன், பிரபாகரன் - கீர்த்திகா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முருகேசபிள்ளை(அனுரா House- கொழும்பு) - பராசக்தி, காலஞ்சென்றவர்களான முத்துத் தம்பி யோகராணி, தணிகாசலம்- சசிமாலா, கனகேஸ்வரி - பாக்கியநாதன், லோகேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, ஜெயநாயகி, காலஞ்சென்ற சௌந்தரராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், குலேந்திரன் - லலிதா, காலஞ்சென்றவர்களான அருளம்மா பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
அபிமன், நர்மதா, நிவிதா, அக்ஷெத், அக்ஷகா, அஸ்மி, விருஷி, நகியா, அபிஷா, நதீஸ், தருணிகா, சஞ்ஜனா, ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அக்ஷிதா, வர்ணிஷா, ரியா, தர்வி, நயன், திலன், பிரதீப்- மிதுலா, தீபிகா, சங்கீத், நிவேதா, ரஜீதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாமரைச்செல்வி, அருள்மொழி, வாசுகி, கலிங்கா(லண்டன்), முருகன், ராசன்(சுவிஸ்), தேனி, திருக்குமரன், காலஞ்சென்ற முரளிதரன், சுயா, காலஞ்சென்றவர்களான அருண், ரஜீதா, மற்றும், பிரசாத், பிரகாஸ், ரவிதா, தயா, பகி, கோபி, பரணி, வினோ, ராஜன், காந்தன், தினேஷ், காலஞ்சென்றவர்களான சர்மிளா, சாதனா, மற்றும், ஷருண், நிருண், தாரணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்ற குகநேசன், சிவகுமாரன், காலஞ்சென்ற சடாச்சரன், குமரகுரு(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி, ஞானசேகர், அபிநயா, ஜெனோபா, வித்தியன் ஆகியோரின் ஆசை மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...