யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்து கடந்த 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் திருவடி எய்திய தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆறமுடியவில்லையே எம் ஆரமுதே
உன் அழியாத நினைவலைகளிலிருந்து
எம்மை ஆற்றமுடியவில்லையே உன் பிரிவை
எம் அடிமனதின் ஆழமதிலிருந்து
மனசு வதைக்கின்றதே தெய்வமே
மரணம் உனை தொட்ட நாளிலிருந்து
ஏது செய்வோம் எம் செல்லமே
எதுவும் இல்லை எம் கையிலே..
காயங்கள் நாட்பட ஆறிப்போகும்
கற்பனைகள் ஒருபொழுதில் மாறிப்போகும்
கனவுகள் எப்பொழுதும் கலைந்துபோகும்
ஆனாலும் அழியாது உன் நினைவும் உன் சுவடும்
ஆறாது மாறாது கடைசிவரை கலையாது
எம்மனசில் கலந்து நீ உயிராகி விட்டதனால்
ஒப்புதலுக்கில்லை உறுதியுடன் சொல்லுகிறோம்..
உலகம் உள்ளவரை உன் நினைப்பை சிரமேற்றி...
எங்கள் தெய்வத்தின் திடீர் மரணச்செய்தி கேட்டு எங்கள் இல்லம் நோக்கி ஓடோடி வந்து கண்ணீர் மல்கி ஆறாத்துயரத்தில் பங்கேற்றவர்களுக்கும், ஆற்றுதலும் தேற்றுதலும் கூறிய அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலமாகவும், அனைத்து சமூக வலைத்தளங்கள் மூலமாக துயரத்தை பகிர்ந்துகொண்டு அனுதாபங்களை தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பல இடையூறுகளின் மத்தியிலும் தூர தேசங்களில் இருந்து நேரில் வருகைதந்து அனுதாபம் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள், பிரசுரங்கள், மலர்வளையங்கள், பூங்கொத்துக்கள் அனுப்பி வைத்து அஞ்சலி தெரிவித்த அனைவருக்கும், இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்து கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி கசிந்து உருகி வணக்கம் செலுத்திய அனைவருக்கும், தேவார திருமுறைகளை ஓதி அஞ்சலி செலுத்திய நல்லுள்ளங்கள் அபிமானிகள் அனைவருக்கும் மற்றும் சமய ரீதியான வேண்டுதல்கள் செய்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் மேலும் அனைத்து நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நல்கிய அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் கணவர் - பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினர்கள்
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...