Clicky

மலர்வு 10 DEC 1943
உதிர்வு 22 AUG 2022
அமரர் நாகேஸ்வரி யோகநாதன்
வயது 78
அமரர் நாகேஸ்வரி யோகநாதன் 1943 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Venthanar Ilansei 27 AUG 2022 United Kingdom

பதிவு - 22.08.2022(4) அன்பிற்குரிய வேலணை ஒன்றியம் பிரித்தானியா செயற்குழு உறுப்பினர்கள் , அங்கத்தவர்கள், ஊரவர்கள் , ஆதரவாளர்கள் ஆகியோரிற்கு வேலணை ஊரைச் சேர்ந்தவரும் , வேலணை மத்திய கல்லூரிப் பெண்கள் விடுதிக் காப்பாளராகப் பலகாலமாகப் பணியாற்றியவருமான , திருமதி நாகேஸ்வரி யோகநாதன் அவர்கள் , இன்று இலண்டனில் காலமானார் என்ற துக்கச் செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரின் கணவரும் , ஈலிங் அம்மன் கோயில் நிர்வாக சபைத் தலைவருமான யோகநாதன் அவர்களுக்கும், அன்னாரின் மகள்மார் , மருமகன், பேரப்பிள்ளைகள் , சகோதரியர் , உற்றார் , உறவினர் , நண்பர்கள் ஆகியோரிற்கும், வேலணை ஒன்றியம் பிரித்தானியா சார்பாக , எம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. வேந்தனார் இளஞ்சேய் தலைவர் - வேலணை ஒன்றியம் பிரித்தானியா