
யாழ். வேலணை வடக்கு இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி யோகநாதன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாம் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
மூன்றாம் ஆண்டு கனப்பொழுதில்
உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்