வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்ட லோஜினா வசந்தராஜ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...