வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த லோஜினா வசந்தராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எம்மைக் கடந்து செல்கிறதே!
கண்மணியாம் நீ இன்றி வாழ்வு
வெறுத்துப் போகிறதே!
சோலைவனத்துப் பூவே உந்தன்
சொந்தம் இழந்து போனதனால்
பாலைவனத்து செடியைப்போல
வாடி வதங்கிப் போனேனடி!
தேடிய வாழ்வு கிடைத்ததென
உன்னோடு ஆடிநடந்த எந்தன் கால்கள்
கோடியில் போட்ட பழந்துணியாய்
கோலம் கிழிந்து போனதெடி!
பத்து மாதம் சுமந்து பெற்ற
உந்தன் பிஞ்சுக் குழந்தைகளும்
பன்னிரெண்டு மாதம் உந்தன்
பாசம் இன்றித் தவிக்குதெடி!
அன்பைக் கொட்டி அறிவை ஊட்டி}
தெம்பாய் வளர்த்த குஞ்சுகள் இரண்டும்
நெஞ்சுரம் இன்றி வாடுதெடி!
உற்றவர் சுற்றவர் ஊர் இருந்தும்
பெற்றவள் அணைப்புப் போல்வருமோ!
உன் பேரன்பை எப்படி நான் கொடுப்பேன்!
பாட்டி தனைத் தாயாக்கிவிட்டு
போர்த்தி மூடிப் போய் விட்டாய்!
பேத்தியவள் பேதையாகி
பேசமுடியாது தவிக்கின்றாள்!
கூடு விட்ட உன்னுயிரை
கூட்டி வந்து காட்டு என்று
கேட்க்கும் உந்தன் பாலகரை
தேற்ற முடியாது தோற்கின்றாள்!
உன்னால் வந்த உறவுகளும்
உறக்கம் இன்றி தவிக்கின்றனர்!
உலகப் பந்தில் மறுபடியும்
உந்தன் விம்பம் தோன்றிடிடுமோ!
என்னோடு வந்த சொந்தம்
மண்ணோடு போனதுவோ!
கண்ணாகிக் காத்தவளே- உன்னை
எந்நாளும் நாம் மறவோம்!
உந்தன் பிரிவால் ஓராண்டாய் துயருறும்
கணவன், பிள்ளைகள், மாமி
மற்றும் உறவினர்கள்.
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...