3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
56
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த லோஜினா வசந்தராஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-05-2023
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எந்தன் உறவே!
உந்தன் முகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ ...!
என்னோடு வாழ்ந்த காலங்களை
எண்ணி எண்ணி ஏங்குகின்றேன்!
நின் திருமுகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ!
மரணம் உன்னை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...