2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
56
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த லோஜினா வசந்தராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தனைச் சிற்பியாய் சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே நல்வளமான வாழ்வு தந்தாயே!!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம்
என் செய்வோம்
எம்தனை தவிக்கவிட்டு
எங்குதான் சென்றீரோ?
உம்மை எண்ணி பேதையராய் துடிக்கின்றோம்
துடுப்பற்ற படகு ஆனோம்
துயர்துடைக்க வந்திடுங்கள்
கல்லுருகும் உங்கள் கனிவான
முகம் கண்டால்
நெஞ்சத்து சோர்வெல்லாம்
தானே உருகிவிடும்
எங்கள் அம்மாவே
ஆண்டுகள் இரண்டு ஆகிவிட்டாலும்
ஆறவில்லை எங்கள் உள்ளம்
தவிக்கின்ற எம்மை விட்டு
தனிப்பிறவி எடுத்து
எங்குதான் சென்றீர்கள்!!!
தகவல்:
குடும்பத்தினர்
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...