5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
56
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 28-05-2025
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த லோஜினா வசந்தராஜ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து உதிர்ந்தாலும்
உம் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
இதழ் விரிகிறது...!!!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...