Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
வயது 54
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 69 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

என்றும் என் அன்பிற்குரிய ஆருயிரே!
ஆண்டுகள் ஐந்து ஆனது.
ஆறவும் இல்லை, ஏற்கவும் முடியவில்லை உங்கள் பிரிவு..

மனதில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து.
ஆறுதல் தேட நினைக்கின்றேன்,
நினைக்கும் ஒவ்வொரு கணமும்
உங்களை இழந்த உண்மை
மீண்டும், மீண்டும் என்னை உடைத்து நொறுக்குகிறது.

வெளியில் சிரித்துக்கொண்டே
உள்ளுக்குள் உங்கள் ஆறுதலையும், அரவணைப்பையும்
 தேடி ஏங்கி நிற்கின்றேன் என் ஆருயிரே!

எங்கள் வாழ்க்கையில் எல்லாமே கொட்டிக்கிடந்தாலும்
நீங்கள் இல்லாத இடம் என்றைக்கும் வெற்றிடம் தான் ஐயா.

எந்த நேரமும் சிரித்த அந்த அன்பு முகத்தைப்
பார்க்க வேண்டும் போல் உள்ளது என் உயிரே!
கல, கல வென்று கதைத்துச் சிரிக்கும் அத்த குரலை
ஒரு முறையாவது கேட்க வேண்டும் போல என்று ஏங்கி தவிக்கின்றேன் ஐயா
உங்களது கையைப்பிடித்து ஆறுதல் தேட மனது துடிக்கிறது.
ஆனால் காலம் செய்த கோலம்.

விதியின் விளையாட்டில் எட்டாத தூரத்தில் போய் நிற்கிறீர்களே என் உயிரே!
எட்ட நின்று எங்களை வழிநடத்தி செல்கிறீர்கள் ஐயா
உங்கள் நெஞ்சில் சாய்ந்த நாட்கள் இன்று நினைவுகளாகி விட்டது ஐயா
உங்கள் குரலால் கலகலப்பாக இருந்த வீடு இன்று அமைதியாக இருக்கறது.

உங்கள் அன்பாலும், அரவணைப்பாலும் பட்டாம் பூச்சியாக
பறந்து திரிந்த நான் இன்று சிறகிழந்த பறவையாகி நிற்கின்றேன் ஐயா

விதியின் சதியால் பாதியில் உதிர்ந்த பூவாக வாடினாலும்
உங்கள் மேல் வைத்த என் காதலும் அன்பும் என்றும் வாடாது ஐயா
எனது ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு வெற்றிடத்தைக் காண்கின்றேன்
எனது ஒவ்வொரு சிரிப்பிற்குப் பின்னாலும்
எனது கண்ணீர் மறைந்து நிற்கின்றது என் ஆருயிரே

அன்று நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்று
எங்கள் வாழ்க்கையில் வழிகாட்டிச் செல்லும் விளக்காக இருக்கிறது ஐயா.
உங்கள் வழிகாட்டலில் உங்கள் நினைவுகளின் நிழலில்
உங்களுக்காக உங்கள் நினைவாக வாழ்கின்றேன் ஐயா.

அடுத்த ஜென்மத்திலாவது எங்கள் வாழ்க்கைப் பயணம்
மிக நீண்டதாக அமைய வேண்டும் என்று
பிரபஞ்சத்தைக் கேட்கின்றேன் என் அன்று அன்பிற்குரியவரே
I miss you Sweet heart.

எங்கள் அன்பான ஆருயிர் அப்பாவே !
நீங்கள் தெய்வமாகி ஐந்து ஆண்டுகள் ஆனது அப்பா
ஆறவில்லை அப்பா
எங்களுக்கு வயது ஆக ஆக இன்னும்
ஆழமாக வலிக்கிறது அப்பா உங்கள் இழப்பு.

நாங்கள் உயரமாக நிற்க வேண்டும் என்று எங்களுக்காக
ஓடி, ஓடி உழைத்தீர்களே அப்பா
எங்கள் கனவுகளுக்காகவே வாழ்ந்தீர்களே!
உங்கள் கண்ணீரை மறைத்து சிரித்து சிரித்து
எங்களை வாழவைத்த எங்கள் அன்பு அப்பாவே

வார்த்தைகள் இல்லை அப்பா உங்களை வாழ்த்த. உங்கள் சிரித்த முகத்தை
ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஏங்குகின்றோம் அப்பா
அப்பாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அப்பாவிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்
என்றெல்லாம் ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா.

அப்பா என்று கூப்பிட முடியாத தூரத்திற்குச் சென்று விட்டர்களே அப்பா.
நாங்கள் பிறக்கும் போது சிரிப்போடும் மகிழ்ச்சியோடும் எங்களை வரவேற்றீர்களே அப்பா
உங்களை நாங்கள் வலியோடும் கண்ணீரோடும் வழி அனுப்பி வைத்த
துர்ப்பாக்கிய நிலையைத் தந்துவிட்டான் அந்த ஆண்டவன்.

அப்பாவுக்கு அப்பாவாக தோழனுக்குத் தோழனாக நின்று 
 எங்களுக்கு தோள் கொடுத்த எங்கள் அன்புத் தெய்வமே!
ஆதரவற்று நிற்கின்றோம் அப்பா 
 நீங்கள் இல்லாத அந்த வெறுமை என்றைக்கும் மறையாது அப்பா.

உங்கள் தோள்மீது சாய்ந்து ஆறுதல் தேடுவதற்கு
இந்த உலகத்தில் சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை அப்பா,
அப்பா! உங்கள் அன்பை விட சிறந்ததும் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
உங்களைப் பிரிந்த வலியை விட கொடியதும் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை அப்பா
 ஏன் கடவுள் இந்த வலியைத்தந்தான்? நீங்கள் தான் அப்பா எங்கள் கடவுள்

நினைத்தது எல்லாம் பேசிக்கதைத்து சிரித்த நாட்களை எல்லாம்
இன்று நினைத்து நினைத்து அழுகின்றோம் அப்பா.
அப்பா நீங்கள் எங்களுடன் இல்லை என்றாலும் உங்களுடைய நினைவுகள் என்றும்
அழகான பொக்கிஷங்கள் தான் அப்பா.

கடவுளே பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு இந்த உலகத்தில்
எங்களுக்கு இருந்த ஒரு உறவு நீங்கள் மட்டும் தான் அப்பா.
அன்பிக்கும், பண்பிற்கும், பாசத்திற்கும் உரிய எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் தான் எங்களுக்கு கடவுளாக இருந்து
வழிகாட்டியாக வழிநடத்திச் செல்கிறீர்கள் அப்பா

I miss you Appa. 
ஆருயிர் மனைவி, பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 4 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Atchuthan Family Germany.

RIPBOOK Florist
Germany 4 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karan Family (IBC Tamil).

RIPBOOK Florist
Netherlands 4 years ago

Summary

Photos