Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
வயது 54
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 69 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

என்றும் என் அன்பிற்குரியவரே!
ஆருயிரிக் கணவரே!
காதலோடு என்றும் எனை
அரவணைத்த அன்புக் கண்ணாளா!
உங்கள் அன்புக் கடலில்
மிதக்க வைத்தவனே
கண்ணீர்க் கடலில்
மூழ்கடித்து விட்டான் என்னை
 காலம் செய்த கோலம்
 கதி கலங்கி நிற்கின்றேன் ஐயா
இல்லற வாழ்க்கையில் எம்மை
 இணைத்து வைத்து அழகு பார்த்தவனே,
உங்களை இழந்து எனை
அழ வைத்து வேடிக்கை பார்க்கின்றான்
அன்பாலும் பாசத்தாலும்
உருவான எங்கள் கோயிலில்
 சந்தோசம் என்ற விளக்கு
 அணைந்துவிட்டதே ஐயா..

ஆண்டவன் எனக்குத் தந்தான்
பொக்கிசமாக உங்களை,
தந்தவனே திரும்பவும் பறித்தெடுத்தான் தனக்காக
ஆண்டுகள் தான்
 மூன்று பறந்தோடிச்சென்றது
ஆனால் நீங்கள் எப்பவும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள் ஐயா
எனக்குள் இருந்து பற்பல
ஆக்கத்தையும் ஊக்கத்தையும்
 தந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா
வளருவேன் நான் உங்கள் ஆசைப்படி
 ஜென்மங்கள் அத்தனை எடுத்தாலும்
 நீங்கள் தான் எனக்கானவர்,
 நான் தான் உங்களுக்கானவள் ஐயா!

உடலால் நீங்கள் எம்முடன் இல்லாவிட்டாலும்
 உணர்வாலும், உள்ளத்தாலும்,
உயிர் மூச்சாகவும் எம்மோடுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா!
 I Miss You Sweet Heart

 அன்புள்ள எங்கள் அப்பாவே!
அன்பும், அரவணைப்பும், கண்டிப்பும்
கலந்து பாசமுமாய் எங்களை வளர்தீர்களே!
 தோள் கொடுக்கும்
அன்புத் தோழனாக இருந்தீர்களே அப்பா!
 தக்க சமயத்தில்
தோள் சாயத் தோள் இன்றித் தவிக்கின்றோம்
 அன்புத் தந்தையே!
 அன்பென்னும் கூட்டில் அழகாய்
 வாழ்ந்தோமே, கோடிகள் எத்தனை கொடுத்தாலும்
 யாராலும் நிரப்ப முடியாது
 உங்கள் வெற்றிடத்தை
எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து
 எங்களை வழிநடத்திச் செல்லும்
அன்புத் தந்தையே!
 உங்கள் ஆசைப்படி உங்கள் வழிகாட்டலோடு
நாம் வாழ்வோம் அப்பா!
 I Miss You Papa

 ஆருயிர் மனைவி அன்புப் பிள்ளைகள்

தகவல்: ஆருயிர் மனைவி அன்புப் பிள்ளைகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Atchuthan Family Germany.

RIPBOOK Florist
Germany 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karan Family (IBC Tamil).

RIPBOOK Florist
Netherlands 3 years ago

Summary

Photos