யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரன் ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பினாலும், அரவணைப்பினாலும் என் வாழ்க்கையை
வசந்தமாக்கிய என் அன்பிற்குரியவரே
ஆண்டொன்று விரைந்தோடிச் சென்றாலும்
உயிர் மூச்சாய் இருக்கின்றீர்கள் என்றுமே என்னுள்ளே
இவ்வுலகில் நீங்கள் இல்லையென்று எண்ணியதில்லை
ஒருபோதும் நாங்கள்
என்னுள்ளே இருந்து என்னை வழிநடத்திக்
கொண்டிருக்கும் என் ஆருயிரே!
உங்கள் காதல் பார்வையாலும் கள்ளமில்லா சிரிப்பாலும் தான்
என்னை தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்
ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தாலும்
என்னவருக்கு இணை யாரும் இல்லை இவ்வுலகில்
ஏழ், ஏழ் ஜென்மத்திலும் நீங்கள் தான்
என் ஆருயிரும், அன்பிற்குரியவரும்
உங்களைப் போலவே அன்பு உள்ளமும் அரவணைக்கும்
குணமும், பண்பும் கொண்ட எங்கள் பிள்ளைகளின்
தைரியத்தில் வாழ்கின்றேன் உங்கள் நினைவாக
I Miss You My Sweet Heart.....!!!!!
அன்புத் தெய்வமே எங்கள் ஆசை அப்பாவே!
அன்பாய், ஆசையாய் வாழ்ந்தோமே அழகழகாய் வாழ்வுதனை
உங்களது வழிகாட்டலில் வாழ்ந்திடுவோம்,
இன்னும் அழகாய் உங்கள் கனவை, நனவாக்க
உங்கள் ஆசை நிறைவேற உயர்ந்திடுவோம் வானளவு
பேசும் தெய்வத்தோடு தான் வாழ்ந்துள்ளோம் இத்தனை காலமும்
அப்பா நீங்கள் தான் எங்கள் கண்கண்ட தெய்வம் எப்பொழுதும்
எங்கள் கோயிலே நீங்கள் வாழ்ந்த எங்கள் வீடுதானப்பா
எங்கள் உணர்வோடும், உயிரோடும் தான் இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் எங்கும் செல்லவில்லை அப்பா
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள் எப்பொழுதும்
ஏழ், ஏழ் ஜென்மத்திலும் எங்கள் பந்தம் தொடரும் அப்பா
அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும் உங்களுக்கு மகன்களாக
உங்களுடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய
பொற்காலங்கள் அப்பா.
I Miss You Appa.....!!!!!
ஆருயிர் மனைவி, பாசமிகு பிள்ளைகள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Atchuthan Family Germany.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Karan Family (IBC Tamil).
May your good soul Rest In Peace “Thambi” you will be missed by all especially Old road Kopay families. Our heartfelt condolences to the family. Kanagasingam family from Kopay old road. OM Shanthi 🙏🏽