Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
வயது 54
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 69 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

என் அன்பிற்குரியவரே!
நினைத்ததை எல்லாம் பேசி, நினைத்ததை எல்லாம் செய்து சந்தோசமாக வாழ்ந்த நினைவுகள் எல்லாம் நான்கு ஆண்டுகளாய் வலிகள் நிறைந்த விழிகளாய் கண்ணீராய் வழிந்தோடுகிறது ஐயா.

உங்களையே பார்த்த கண்கள் இரண்டும் ஒளியிழந்து கிடக்கிறது.
உங்களையே நினைத்த மனம் இன்று உணர்வற்று புரள்கிறது ஐயா.
கனவோடும், நினைவோடும் உங்களை நினைத்து தனிமையில் தவிக்கின்றேன் அன்பிற்குரியவரே.

இந்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த
பெரும் சொத்து நீங்கள் தானே ஐயா.
அன்பு, பாசம், அரவணைப்பு, அந்தஸ்து
எல்லாவற்றையும் அளவில்லாமல் தந்த என் அன்பிற்குரியவரே.
என்றும் மாறாது உங்கள் ஞாபகங்களும், நினைவுகளும்.

உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எல்லாம் விலைமதிப்பில்லாத
பொற்காலங்கள்தான் ஐயா.
நீங்கள் எப்பொழுது வருவிங்கள் என்று இதயம் தேடுகிறது.
ஆனால் உங்கள் இழப்பை நம்ப மனம் மறுக்கின்றது.
முத்துக்கு முத்தாய் கிடைத்த என் அன்புப்பொக்கிசத்தை
இழந்து தவியாய்த் தவிக்கின்றேன் ஐயா.

இந்த உலகத்தில் எமக்கு என்ன மிக அதிகமாகப் பிடிக்கின்றதோ, அதைத்தானாம் இந்த இயற்கை எம்மிடம் இருந்துமுதலில் பிடுங்கிக்கொள்ளுமாம்.

நல்ல அழகான வாழ்க்கையை, அன்பான வாழ்க்கைத்துணைவனைத் தந்த இறைவனுக்கு ஏன் இதயமே இல்லாமல் போய்விட்டது ஐயா?

இதயம் ஒன்று அவனுக்கு இருந்திருந்தால்…
என்னிடம் இருந்து பறித்து தனக்கென எடுத்திருக்கமாட்டான் உங்களை.
கூடு இல்லாத குருவிகளாய்த் தவிக்கின்றோம் ஐயா.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என் அன்பானவரே!

வானத்தில் பிரகாசமாய் மின்னும் நட்சத்திரமாய்
உங்களைப் பார்க்கின்றேன் ஐயா.
அதில் நீங்கள் என்னைப்பார்த்து கண்சிமிட்டுவது போல் உணர்கின்றேன் அன்பிற்குரியவரே!

என்னை விட்டு உங்களால் போக முடியாது ஐயா.
கண்ணுக்குத்தெரியாமல் நிழலாய் இருந்து என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறீர்கள் ஐயா.

எனக்கு பற்பல ஊக்கங்களையும், ஆக்கங்களையும் தந்துகொண்டிருக்கிறீர்கள்.
எனக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் எப்பொழும்
எனக்குள்ளேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள் ஐயா.

உங்கள் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கிறது என் அன்பிற்குரியவரே!

 I Miss you Sweet Heart.

நிலையில்லாத இந்த உலகத்தில் எங்கள் அன்பான அப்பாவை விட சிறந்ததும், உயர்ந்ததும் வேறு எதுவுமில்லை அப்பா.

எங்கள் வாழ்வில் நாங்கள் தவறவிட்ட மிகப்பெரிய பொக்கிசம் எங்கள் அப்பாதான்.
மிகப்பெரிய வரம் என்றால் அதுவும் எங்கள் அப்பாதான்.

 அப்பா! நீங்கள் எங்கள் கண்முன்னே இல்லை என்றாலும் உங்கள் நினைவுகள், நிகழ்வுகள் எல்லாம் மிகப்பெரிய அழகான பொன்னான பொற்காலங்களே!

இந்தப் பொய்யான உலகத்திலே எங்களுக்கு உண்மையாய் இருந்த உயிரும் நீங்கள் தான், உறவும் நீங்கள் தான் அப்பா.

உங்கள் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும்,அறிவுரைக்காகவும் ஏங்கித்தவிக்கின்றோம் அப்பா.
நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த வரம் இல்லை அப்பா,நீங்கள் கடவுளாகவே எங்களுக்கு கிடைத்த வரம் அப்பா.ஆனாலும் உங்களுக்கு அனுதினமும் மலர் வைத்து வணங்கும் போதெல்லாம் கனக்கிறது இதயம்.

மெழுகுவர்த்தியாய் இருந்து எங்களுக்கு வெளிச்சம் தந்தீர்களே அப்பா.
எங்கள் இதயம் இன்று இருளாகி ஒளியற்றுக்கிடக்கின்றது.

நீங்கள் எங்களுக்கு அப்பாவாக மட்டுமன்றி அருமைத்தோழனாய்,ஆசானாய்,வழிகாட்டியாய் இருந்து எங்களை வழிநடத்தினீர்களே அப்பா.

இன்று நீங்கள் கண்ணுக்குத்தெரியாமல் இருந்து எங்களுக்கு வழிகாட்டுகிறீர்கள் அப்பா.
எங்களுக்கு பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறீர்கள் அப்பா.
உங்கள் ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் எங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றது எங்கள் அன்பான ஆசை அப்பா.
We Miss You Papa.

வலி நிறைந்த நினைவுகளோடு
உங்கள் ஆருயிர் மனைவி,பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mama, Maami and Sasikumar Family From Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Atchuthan Family Germany.

RIPBOOK Florist
Germany 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karan Family (IBC Tamil).

RIPBOOK Florist
Netherlands 3 years ago

Summary

Photos