 
                    
            அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
                    
                    
                முன்னாள் ஆயுர்வேத வைத்தியர்- நல்லூர், வட்டக்கச்சி, பல்லவராயன்கட்டு, பூனகரி, கண்டாவளை
            
                            
                வயது 76
            
                                    
             
        
            
                அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
            
            
                                    1944 -
                                2020
            
            
                நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    இமயம் சரிந்தது நம் இதயம் வெடித்தது 
உங்கள் வரவால் உயர்வாய் வாழ்ந்தோம்
அன்ரியும் நீங்களும் அறத்தொடு இணைந்து 
அன்பாய் வாழ்ந்தீர் 
பெண்மையைப் போற்றிய பெருந்தகை நீங்கள்.
விதியது வலியது, 
வலியையும் வென்று உலகினில் வாழ்ந்தீர் 
அவனியில் யாவரும் குழந்தைகள் உமக்கு 
எங்கள் சிட்டுவுக்கு நீங்கள் மட்டுமே இனிய அப்பா!
உறவினில் நேர்த்தி, உடையினில் நேர்த்தி, கடமையில் நேர்த்தி, கருத்தினில் நேர்த்தி. 
இறுதிக் கணங்கள் இதயத்தில் ஆணிகள் சுமந்தோம் ஆருயிர் மகனும் அவன் தன் குடும்பமும் கதறிய ஓசை காதினில் விழுந்தும் எழாமல் சென்றதேன்?
செருக்களமாய் நம்மனங்கள் பற்றி எரியுதிங்கே!
நன்மையோ தீமையோ அனைத்தையும்
நலமாய் நிகழ்த்தி வைப்பீர். 
அற்றைத் திங்களில் புத்தம் புதுத் தாள்களுடன்
ஒற்றை எண்ணிக்கையில் நெல்மணி மஞ்சளுடன் நீங்கள் தரும் கைவிசேடத்துக்காய் அடுக்கடுக்காய் நாம் காத்திருப்போம் 
பள்ளிப் பருவத்திலும், அதற்கடுத்த பருவத்திலும் வாகாய் வாய்த்ததுவே நல்வருடங்கள் பல பலவே!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது போல் எது கூறினும் , எப்போ கூறினும் மறுபரிசீலனைக்கு இடமேது சித்தப்பா? 
அனைத்துமே சரியாக எப்போதும் எங்கள் நம்பிக்கை நாயகனாய் நீங்கள் மட்டுமே!!
அறியாதது ஏதுமில்லை, 
நடமாடும் நூல்நிலையம் நீங்கள்
உணவே மருந்தாக வகை சொன்ன வைத்தியர் 
நீதியும் , நேர்மையும் , பக்தியும் பாசமும்
சித்தத்துள் சித்திக்கும் பேராளன் நீங்கள்!
கண்மணி போல் ஒற்றை மகனும், இரட்டைப் பேரர்களாய் மலர்ந்து மகிழ்ந்திருந்தீர் 
எதை நினைத்து வீழ்ந்தீர்கள்? 
எழாமலே போனதெங்கே?
ஆறாது எம் துயரம் , பேறான சித்தப்பா போனதெங்கே ? 
புலம்புகிறோம் நாமிங்கே!
உங்களைப் போல் நல்லுறவை  நாம் 
காண்பதெங்கே பூதலத்தில்?
ஆத்மாசாந்தி பெற பிரார்த்திப்பதுடன் 
சிட்டு குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் இழப்பினை தாங்கும் வல்லமையை இறைவன் அருள வேண்டுகிறோம். 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
நாகலிங்கம் குடும்பம்
                
                    Write Tribute
     
                     
            