

திதி:16/07/2025
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு ஐந்து சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும்
எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
எங்கள் அன்புத் தெய்வமே
அன்பு அப்பாவே
நொடிப்பொழுதில் எமை நோகவிட்டு
சென்று விட்டீர்கள்!
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
எங்கள் உயிர் மூச்சில்
நீங்களும் எம்முடன்
இன்னமும் வாழ்கிறீர்கள்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
தாயுமானவர் இல்லம்,
சில்வாவீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.