

திதி: 30-06-2021
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை நம் துயரம்
உனது உருவம் மறைந்தாலும்
உன் அன்பு மறையாது
பண்புக்கு இலக்கணமாய்
பாதைக்கு வெளிச்சமாய்
பாசம் கொண்டு அனைவரையும்
பக்குவமாய் வழி நடத்தி
குடும்பத்திற்கு ஒளிவிளக்காய்
குலத்திற்கு கொடைவள்ளலாய்
நான் என்று வாழாமல்
நாம் என்று வாழ்ந்திருந்து
நீ வாழ்ந்த காலந்தனை
நினைத்து நீர் சொரியுதையா!
அப்பா எனும் அற்புதத்தை இழந்து ஓராண்டு...
அப்பப்பாவின் அரவணைப்பை இழந்து ஓராண்டு..
மாமாவின் கரிசனையை இழந்து ஓராண்டு...
அண்ணாவின் அன்பை இழந்து ஓராண்டு...
மைத்துணனின் பாசத்தை இழந்து ஓராண்டு...
பெரியமாமா
பெரியப்பா
சித்தப்பாவாக அறிவுரையுடன் உபசரிப்பை இழந்து ஓராண்டு..
வைத்தியனாக
நண்பனாக
உறவினனாக பொதுமகனாக..
நல்லதொரு தமிழ்மகனை இழந்து ஓராண்டு...
மொத்ததில் நாம் மகிழ்ச்சியை தொலைத்து
ஓராண்டு...
தாயுமாகிய தந்தையே
உங்கள் நினைவுகள்
எம்மை ஆற்றுப்படுத்தட்டும்.
தங்கள் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தின்றோம்.