யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நிகழ்வு அழைப்பும் நன்றி நவிலலும்.
11/07/2020 அன்று இறைவனடி சேர்ந்த எம் குடும்பத்தலைவர் சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் அந்தியட்டி கிரிகைகள் 08/08/2020 சனிக்கிழமை காலை 6.00மணிக்கு கீரிமலையிலும் அதனைத்தொடர்ந்து 31ம் நாள் நிகழ்வுகள் 10/08/2020 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சில்வாவீதி வட்டக்கச்சியில் உள்ள அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் உற்றார் உறவினர்கள் நண்பர்களை இதை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி அமரத்துவம் அடைந்த எங்கள் அன்பு அப்பா சின்னத்தம்பி பேரம்பலம் அவர்கள் திடிரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் இருந்த 5 நாட்களும் அயராது உழைத்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், அப்பாவை வைத்தியசாலையிலே வந்து பார்த்து சுகமடைய வேண்டும் என பிரார்த்தித்த அனைத்து உறவுகள், பெரியோர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாவற்றையும் மீறி விதிப்பயனாக திடிரென அப்பாவை இழந்தபோது அந்தக்கணம் முதல் இன்றைய நாள் வரை ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றியவர்களுக்கும் இறுதிக்கிரியைகள், தகனக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், உணவளித்து உபசரித்தவர்கள் தொடக்கம் அனைத்துவிதமான உதவிகளைச் செய்தவர்களுக்கும், துண்டுப்பிரசுங்கள் பாதாதைகள் வெளியிட்டோருக்கும் சமூகவலைத்தளங்களிலும் இணையத்திலும் இத்துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டவர்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமாக தங்கள் இரங்கல்களைத் தெரிவித்தவர்களுக்கும் கொரோனா அபாயத்தைக்கூட பொருட்படுத்தாது லண்டனிலும் வட்டக்கச்சியிலும் எங்கள் வீடுகளுக்கு வருகை தந்து தங்கள் இரங்கல்களைத் தெரிவித்தவர்களுக்கும் எம் சிரம்தாழ்த்திய நன்றிகள். நான் வட்டக்கச்சியில் இல்லாத நிலையிலும் அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்த உறவுகளுக்கும் இணைந்து கலந்துகொண்ட கச்சேரி உறவுகள் என் பாடசாலை நண்பர்கள், அனைத்து நண்பர்கள் உற்றார் உறவுகள் அனைவருக்கும் தங்கள் பாதம்தொட்டு நன்றி கூறுகின்றேன். யாருக்காவது நன்றி கூற தவறவிட்டிருந்தால் அவர்களுக்கும் என் நன்றிகள்.