

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி- 08/7/2023
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காற்றிலே கலந்து ஆண்டுகள் மூன்று ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள்
ஓரம் கண்ணீர் துளிகளாய்
மூன்று வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஒவ்வொரு நிமிடமும் ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் சாந்தியடைய எம் கண்ணீப்
பூக்களால் அஞ்சலி செய்கின்றோம்.
எங்கள் தாயுமானவரின் 3ம் ஆண்டுத்திவசம் சில்வாவீதி வட்டக்கச்சியில் உள்ள தாயுமானவர் இல்லத்தில் 8/7/2023 சனிக்கிழமை நடைபெறும். உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
முகவரி:
தாயுமானவர் இல்லம்,
சில்வாவீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.