

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19/06/2022
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
வானுலகம் சென்றாலும்
எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
ஆற்றலால் வழிப்படுத்திய அப்பப்பா..
கண்டிப்புடன் கனிமொழிபேசும் மாமா..
ஆதரித்து வழிநடத்தும் அண்ணா...
கண்ணியமான மைத்துணன்..
உரிமையுடன் அரவணைக்கும்
பெரியப்பா, பெரியமாமா..
கொஞ்சிக்குலாவும் தாத்தா,
பாட்டன்,பூட்டன்...
உதவிசெய்யும் உறவினன் ஊரவன்...
நண்பர்களின் நாயகன்..
சைவநெறி பற்றாளன்..
எல்லாமாக வாழ்ந்த எங்கள்
தாயுமானவரை இழந்து
இரண்டாண்டு..!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று
வீற்றிருக்கும் உங்களை
எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை
செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள்
வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள்
நினைவலைகள்
உங்களிற்காய்
தலை
வணங்குகின்றோம்!
ஆண்டு இரண்டல்ல
எத்தனை
ஆண்டு சென்றாலும் எங்கள்
நினைவுகள் உங்களை
நினைத்தே ஏங்கும்..
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
திதி நிகழ்வுகள் 19/06/2022 ஞாயிற்றுக் கிழமை சில்வாவீதி வட்டக்கச்சியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் உற்றார் உறவினர்கள் நண்பர்களை இதை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.